Gold Nuggets: மொந்தா புயல்! உப்பாடா கடலை புரட்டி போட்ட மழை! தங்க வேட்டைக்கு புறப்பட்ட மக்கள்
அமராவதி: மொந்தா புயல் பாதிப்பால் உப்பாடா கடற்கரையில் தங்கத் துகள்கள் கிடைப்பதாக வந்த தகவலை அடுத்து உள்ளூர் மக்கள் கடற்கரைக்குச் சென்று தங்கத் துகள்களை தேடத் தொடங்கியுள்ளனர். அதாவது கடற்கரை மணலை சலித்து சலித்து தேடி வருகிறார்கள்.
தமிழகம், தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைப் பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் முதல் புயலாக வங்கக் கடலில் உருவானது. இதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மொந்தா என பெயரிடப்பட்டது.

இந்த புயலானது கடந்த 28 ஆம் தேதி இரவு காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திரா பக்கம் கரையை கடந்த புயல் இதுவாகும்.
காக்கிநாடா
புயலால் காக்கிநாடா மாவட்டத்தின் உப்பாடா கடற்கரை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த புயல் புயலானது தங்கத்தை கடற்கரைக்கு கொண்டு வந்ததாக செய்தி பரவியது. இதனால் மக்கள் தங்க வேட்டைக்காக உப்பாடா கடற்கரைக்கு வந்துள்ளனர்.
கனமழை
புயல் மற்றும் கனமழைக்கு பிறகு கடலில் இருந்து பல பொருட்கள் கரை ஒதுங்குவதாக மக்கள் நம்புகிறார்கள். அதிலும் தங்கத் துகள்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புயலுக்கு பின்னர் மணலை சலித்து தேடுகிறார்கள்.
உப்பாடா கடல்
மொந்தா புயலால் உப்பாடா கடற்கரையில் ராட்சத அலைகள் கிராமங்களுக்குள் புகுந்தது. இப்போது கடல் அமைதியாக இருப்பதால் மக்கள் தங்கத்தை தேடி வருகிறார்கள்.
தங்க வேட்டை
பல நூறாண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் வைத்திருந்த தங்கம் கடலில் மூழ்கியதாம். இந்த உப்பாடா கடலில் மூழ்கியதால் அவரை புயலின் போதகு கரை ஒதுங்கும் என்ற நம்பிக்கையில் பலர் கடற்கரையில் கூடியுள்ளனர்.
தங்கம் தேடி கடற்கரைக்கு
இந்த ஆண்டு என்றில்லை கடந்த ஆண்டும் இதே போல் புயலின் போது பொதுமக்கள் தங்கம் தேடி கடற்கரைக்கு வந்தனர். காக்கிநாடா அருகே கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ளது உப்பாடா கடற்கரை!
பணக்காரர் ஆகும் அளவுக்கா
இந்த உப்பாடா கடற்கரையில் தங்கம் தேடுவது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே இந்த தங்க வேட்டை நடந்து வருகிறது. நான் கூட 10 முறை முயற்சித்ததில் ரூ 1000 மதிப்பிலான பொருட்கள் எனக்கு கிடைத்தனர்.
300 பேர் சலிப்பர்
புயல் வந்து சென்றதும் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என மணலை சலித்து தங்கம் தேடும் பணியை செய்தனர். ஆனால் நாளடைவில் இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டதே தவிர, தங்க வேட்டையை தேடுவது குறையவில்லை. அந்த காலத்தில் பழைய செப்பு காசுகள், தங்க காசுகள் கிடைத்துள்ளன.
கட்டுக் கதை
அதாவது பணக்காரர்களின் வீடுகள் கடலில் மூழ்கியதால் அந்த தங்க காசுகள் அந்த கால கட்டத்தில் கிடைத்தன. தங்க முலாம் பூசிய ஒரு பொருள் அல்லது நக்கட்ஸ் போல் சிறிய துண்டுகள் என 500 ரூபாய் முதல் ரூ 1000 கிடைக்கும் வகையிலேயே தங்கம் கிடைக்குமே தவிர! பணக்காரர் ஆகும் அளவுக்கெல்லாம் தங்கம் கிடைக்கும் என்பது கட்டுக்கதை என அந்த மீனவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications