சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூக்கை நுழைச்சீங்கன்னா.. எச்சரித்த கனிமொழி! எட்டி கூட பார்த்துடாதீங்க.. பறந்து வந்த முக்கிய உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்பி கனிமொழி கோரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஒவ்வொரு தொகுதிகளிலும் கவுன்சிலர்கள் சார்பாக ஆய்வு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கவுன்சிலர்கள் சாலைகளில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.

இந்த முறை தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. சென்னையில் 200 வார்டுகளில் பெண்கள்தான் அதிகம் வென்றனர்.

ஜிப்மர் உத்தரவு! மத்திய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி?.. இது நல்லதில்லை.. கனிமொழி கடும் தாக்கு ஜிப்மர் உத்தரவு! மத்திய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி?.. இது நல்லதில்லை.. கனிமொழி கடும் தாக்கு

பெண் உறுப்பினர்கள்

பெண் உறுப்பினர்கள்

இந்த முறை தமிழ்நாட்டில் பெண் கவுன்சிலர்கள் அதிகம் தேர்வானது பெரிய வரவேற்பை பெற்றது. 101 வார்டுகளை பெண்கள் பிடித்து புதிய சாதனை படைத்தனர். அதோடு சென்னை உட்பட 11 முக்கியமான மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்திய அளவில் இந்த தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆனால் பெண் கவுன்சிலர்கள் பலரின் வீட்டு ஆண்கள் கவுன்சிலருக்கான் பணியை செய்வதாக புகார் எழுந்தது. அதாவது பெண்களுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் அரசியல் ஆண் தலைவர்கள் தங்கள் மனைவிகளை தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்துள்ளனர். மற்றபடி பணிகளை எல்லாம் கணவர்கள்தான் செய்கிறார்கள். சில தொகுதிகளில் அப்பாக்கள் செய்கிறார்கள் என்று புகார் எழுந்தது.

விமர்சனம்

விமர்சனம்

பெண் கவுன்சிலர்கள் கணவர்கள்தான் கவுன்சிலர்கள் போல செயல்படுகிறார்கள் என்று புகார்கள் வைக்கப்பட்டன. நான்தான் கவுன்சிலர்.. உங்களால் முடிந்ததை பார்த்துக்கோங்க என்று பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் சிலர் இடங்களில் சண்டை போடும் வீடியோக்களும் கூட வெளியாகின. சமீபத்தில் இது பற்றி பேசிய திமுக கனிமொழி, பெண் கவுன்சிலர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும். அவர்களின் பணிகளில் குடும்பத்தினர் மூக்கை நுழைக்க கூடாது.

மூக்கை நுழைக்க கூடாது

மூக்கை நுழைக்க கூடாது

பெண் கவுன்சிலர்களை சுயமாக பணி செய்ய விடமால் வீட்டு ஆண்கள் தலையிட கூடாது. வீட்டில் உள்ள கணவர், அப்பா, அண்ணன் ஆகியோர் வேலைகளை பார்த்துக்கொள்வார்கள் என்று பெண் கவுன்சிலர்கள் சும்மா இருந்துவிட கூடாது. உங்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதை நன்றாக பயன்படுத்துங்கள், என்று கனிமொழி எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஆனாலும் பல இடங்களில் தொடர்ந்து பெண் கவுன்சிலர்களின் பணிகளை அவர்களின் கணவர்கள்தான் செய்தனர்.

 தடை

தடை

இந்த நிலையில் கவுன்சிலர்களின் பணிகளில் அவர்களின் குடும்பத்தினர் தலையிட கூடாது என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதோடு பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் நிலைக்குழு - மண்டல கூட்டங்களுக்கு வருவதை தடை செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டங்களுக்கு கணவர்கள், பெற்றோர்கள் எட்டி கூட பார்க்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
After Kanimozhi warned, Chennai Corporations important notification to woman councilors. திமுக எம்பி கனிமொழி கோரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X