அன்று 'தாத்தா' கருணாநிதி தலைக்கு விலை! இன்று 'பேரன்' உதயநிதி'தலை'க்கு ரூ10 கோடி அறிவித்த "அகோரி"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வரான கருணாநிதி, கடவுள் ராமர் குறித்து விமர்சித்த காரணத்தால் 2007-ம் ஆண்டு அவரது தலையை வெட்டி சீவி வந்தால் எடைக்கு எடை தங்கம் தருவேன் என்றார்; இன்று சனாதனத்தை விமர்சித்த கருணாநிதி பேரன் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ10 கோடி பரிசு என அறிவித்திருக்கிறார் ஒரு சாமியார்.

2007-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என ராமர் பால சர்ச்சையில் கேள்வி எழுப்பினார். அப்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது.

After Karunanidhi now grandson Udhayanidhi also faces thereaten from Saints

அந்த சர்ச்சைகளுக்கு நடுவே, "ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி அறிவித்தார்.

After Karunanidhi now grandson Udhayanidhi also faces thereaten from Saints

இதற்கு கருணாதி பல முறை சரியான பதிலடியும் கொடுத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கருணாநிதி, இந்த மாநாட்டிற்கு கருணாநிதி ஒருவேளை தலையோடு வருவாரா இல்லை தலை இல்லாமல் வருவாரா என்று சந்தேகத்தோடு அமர்ந்திருப்பீர்கள். தலை என்பது தலைக்கு மேல் உள்ள பகுதி மாத்திரம் கிடையாது. தலை என்பது ஒருவருடைய முகவரி. தலையே போனாலும் கருணாநிதியின் முகவரி தமிழ்நாட்டை விட்டு என்றைக்கும் போகாது. தமிழ் இலக்கியத்தை விட்டுப் போகாது. இலக்கியத்தில், கலைத்துறையில், அரசியல் துறையில் எனது முகவரி இடம் பெற்றிருக்கிறது. பெரியார், அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் நாட்குறிப்புகளில் எனது முகவரி இருக்கிறது. ஏன் உங்கள் நாட்குறிப்பிலும் எனது முகவரி இருக்கிறது. ஆகவே என்னுடைய முகம் மறைந்து போய்விடும். தலை காணாமல் போய்விடும் என்றும் நம்ப வேண்டாம். தமிழ்நாட்டில் இந்த கருணாநிதி ஆற்றியிருக்கிற தொண்டுகளை, நல்கியிருக்கிற தியாகங்களை, எண்ணிப் பார்த்தால் தலையே போய்விட்டாலும் கூட இந்திய தபால் தலையில் இந்த தலை இடம் பெற்றே தீரும். ஆகவே தலையை கொய்து வா... என்று சொல்லுகிற நல்ல நண்பர்களை நான் பாராட்டுகிறேன். எனது நாக்கை அறுத்துக்கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு தங்கத்தால் பரிசளிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தலையும், நாக்கும் எவ்வளவு விலை மதிக்கத்தக்கது பாருங்கள் எனவும் பேசியிருந்தார்.

தற்போது தாத்தா கருணாநிதியைப் போல அவரது பேரன் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சாமியார்களின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறார். சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்காக உ.பி. சாமியார் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ10 கோடி பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார். இது கடுமையான கண்டனத்துக்குரியது.

பரம்பரையே சனாதன எதிர்ப்பு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+