கரூரில் மரணஓலம்! கூலாக சென்னைக்கு ஓடி வந்த விஜய்! நீலாங்கரை வீட்டில் போலீஸார் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் 38 பேர் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து அவசர அவசரமாக தப்பி வந்த விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரூரில் 38 பேர் உயிரிழந்த நேராக கரூர் மருத்துவமனைக்கு செல்லாமல் ஓடி வந்து நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

karur vijay

காயமடைந்தவர்கள்: 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம்: காவல்துறை அனுமதித்த எண்ணிக்கையை (10,000 பேர்) விட, சுமார் 30,000 முதல் 60,000 பேர் வரை கூடி இருந்ததாக கூறப்படுகிறது. ஒதுக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு குறைவாக இருந்தது.

விஜய் வருவதற்கு ஏற்பட்ட தாமதம்: விஜய் மதியமே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக மாலையில் வந்து சேர்ந்தார். நீண்ட நேரம் காத்திருந்த கூட்டத்தில் குடிநீர், உணவு வசதியின்மை மற்றும் வெப்பம் காரணமாக நெரிசல் அதிகமாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

திடீர் மின்தடை: ஒரு கட்டத்தில் திடீரென மின் விளக்குகள் அணைந்ததால், மக்கள் பீதியடைந்து கூட்ட நெரிசல் தீவிரமடைந்ததாகவும், அப்போது ஒன்பது வயது சிறுமி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதும் பீதியை அதிகப்படுத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை ஆணையம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ₹10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவி: கரூரில் உள்ள காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாமக்கல் மற்றும் சேலத்தில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து, "என் இதயம் நொறுங்கிப் போயிருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்" என்று விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அதுவும் சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்து இந்த

வழக்கு: பொதுக்கூட்டத்தை நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய தகவல்களின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று இரவு கரூர் செல்ல உள்ளார். ஆனால் இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமான விஜய்யோ அவசர அவசரமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்.

பின்னர் அங்கிருந்து நீலாங்கரை வீட்டிற்கு விஜய் வந்துவிட்டார். அந்த வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. அங்கும் செய்தியாளர்கள் அவரை சந்திக்க முயற்சித்த போது அவர் தவிர்த்துவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+