2 வழக்குகளில் அடுத்தடுத்து விடுதலையான பொன்முடி! இப்போ சட்டவிரோத பண பரிமாற்ற புகாருடன் அமலாக்கத்துறை!
சென்னை: சொத்து குவிப்பு மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் அடுத்தடுத்து விடுதலையான தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி, தற்போது சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த விவகாரம் நீண்ட சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு தற்போதுதான் ஒருவிதமாக ஓயத் தொடங்கியது. இந்த நிலையில் விழுப்புரத்தில் பதிவான வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை அடிப்படையாக கொண்டு மற்றொரு தமிழ்நாடு அமைச்சரான பொன்முடி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுவும் நில அபகரிப்பு வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றில் அடுத்தடுத்து அமைச்சர் பொன்முடி நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறை புதிய வழக்கில் சோதனை நடத்தி வருகிறது.

நில அபகரிப்பு வழக்கு: 2001-ல் சென்னை சைதாப்பேட்டை ஶ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தார் என்பது ஒரு வழக்கு. 2003-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இந்த வழக்கில் அண்மையில் நீதிபதி ஜெயவேல் தீர்ப்பளித்தார். அமைச்சர் பொன்முடி மீதான புகார்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை; பொன்முடி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது இந்த வழக்கிலும் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாத நிலையில் பொன்முடி, அவரது மனைவி விடுதலை செய்யப்பட்டனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம்: இரண்டு வழக்குகளிலும் அடுத்தடுத்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாரை கையில் எடுத்துள்ளது. அதாவது விழுப்புரத்தில் பதியப்பட்ட வழக்கில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறிய தற்போது பொன்முடிக்கு சொந்தமான பல இடங்களில் துணை இராணுவப் படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications