கொரோனா உயிரிழப்புகள் இல்லாத சென்னை.. சாதித்துக் காட்டிய தலைநகர்.. 138 நாட்களுக்கு பின் முதல்முறை
சென்னை: சென்னை: தலைநகர் சென்னையில் இன்று (ஜூலை 11) கொரோனா காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு சென்னையில் கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் இன்று தான்.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு அப்போது 35 ஆயிரம் வரை கூட சென்றது.
இதையடுத்து மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து 51ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று (ஜூலை 11) மாநிலத்தில் 2,775 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கொரோனா உச்சத்தில் இருந்து தலைநகரில் 171 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து 51ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று மாநிலத்தில் 2,775 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கொரோனா உச்சத்தில் இருந்து தலைநகரில் இன்று 171 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை
முதல் அலையிலும் சரி, இரண்டாம் அலையிலும் சரி கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையான சென்னை தான். குறிப்பாக இரண்டாம் அலையில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் 110 வரை சென்றது. ஆனால், ஊரடங்கிற்குப் பின் நிலைமை அப்படியே மாற தொடங்கியது.

உயிரிழப்பு இல்லை
சென்னையில் கடந்த மே மாதம் உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்புகள், அதன் பிறகு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 11) தலைநகர் சென்னையில் ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை. கடைசியாகக் கந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தான் கொரோனா உயிரிழப்புகள் சென்னையில் பூஜ்ஜியமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சுமார் 138 நாட்களுக்குப் பின் கொரோனா உயிரிழப்புகள் பூஜ்ஜியமாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உயிரிழப்பு
ஒட்டுமொத்தமாக இன்று மாநிலத்தில் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இணை நோய் இல்லாத 9 பேரும், 50 வயதுக்குக் குறைவான 8 பேரும் அடக்கம். இதுவரை தமிழ்நாட்டில் 33,418 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவை
இப்போது கோவை மாவட்டத்தில் தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இன்று 298 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சையில் 210 பேருக்கும் ஈரோட்டில் 198 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகளைப் பொறுத்தவரைக் கோவையில் 7 பேரும், கடலூரில் 5 பேரும் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications