ரத்தன் டாடாவுக்கு மோடி அனுப்பிய ஒரே ஒரு மெசேஜ்.. நானோ கார் ஆலை அமைந்தது எப்படி தெரியுமா?
சென்னை: ரத்தன் டாடாவின் கனவு திட்டங்களில் ஒன்று டாடாவின் நானோ கார். இந்த கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 2008-ல் குஜராத்தில் அமைக்கப்பட்டது. முன்னதாக மேற்கு வங்கத்தில் அமைக்க முடிவு செய்த டாடா, எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த முடிவை கைவிட்டு குஜராத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆலையை நிறுவினார். குஜராத்திற்கு இந்த தொழிற்சாலையை கொண்டு செல்லும் முடிவை ரத்தன் டாடா எப்படி எடுத்தார் என்பது தொடர்பான சுவாரசியன தகவல் தற்போது பரவி வருகிறது. இது பற்றி பார்க்கலாம்.
நாடறிந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று முன் தினம் இரவு காலமானார். 86-வயதான ரத்தன் டாடா தொழில் அதிபர் மட்டும் இன்றி சிறந்த மனித நேயம் கொண்டவர். அவரது எளிமையான பண்பும், நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு அவர் காட்டிய அதிக அக்கறையும் சமூக நல பணிகள் குறித்தும் சுவாரசிய தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை குஜராத்தில் எவ்வாறு முதலீடு செய்தது என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்த விவரம் வருமாறு:-

நடுத்தர வர்க்கத்தினரும் கார் வாங்கும் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ரத்தன் டாடா, நானோ கார் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த நானோ கார் தொழிற்சாலையை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமைக்க முதலில் டாடா நிறுவனம் திட்டமிட்டது. 2006 ஆம் ஆண்டு இதற்கான முயற்சிகள் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் அப்போது இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்றது. முதல்வராக புத்தாதேப் பட்டாச்சார்யா பதவி வகித்தார்.
சிங்குரில் கார் தொழிற்சாலை அமைக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பெரிய அளவில் அவர் போராட்டங்களை முன்னெடுத்ததால், மேற்குவங்க மாநிலத்தில் நானோ கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்ட ரத்தன் டாடா, குஜராத்தின் சனாத் என்ற இடத்தில் புதிய தொழிற்சாலையை அமைத்தார். அங்கிருந்து டாடா நிறுவனத்தின் நானோ உற்பத்தி நடைபெற்றது. இந்த தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்க அனுமதி கிடைத்தது
முன்னதாக தொழிற்சாலைக்கு எதிராக மேற்கு வங்கத்தில் கடுமையான போரட்டங்கள் நடைபெற்றதால், அங்கு முதலீடு செய்யும் முடிவை கைவிட்ட ரத்தன் டாட்டா, செய்தியாளர்களுக்கு கூறுகையில், "அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி ஒரே ஒரு மெசேஜ்ஜை தட்டி விட்டராம். அதாவது வெல்கம் என்ற ஒரு மேசேஜ் அனுப்பி ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை தான் ஈர்த்ததாக மோடி 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி பேசுகையில், "நானோ கார் திட்டத்திற்கு உதவி அளித்து முதலீட்டை ஈர்க்க பல நாடுகளும் முயற்சி செய்தன. ஆனால், குஜராத் அதிகாரிகள், இந்த திட்ட முதலீடு இந்தியாவை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டனர். மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாக ரத்தன் டாடா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய போது அவருக்கு "வெல்கம்' என்ற ஒருமேசேஜ் அனுப்பினேன். ஒரு ரூபாய் மெசேஜ்-ஆல் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் இப்போது பார்க்கலாம்" என்றார்.
டாடா நானோ கார் சந்தைக்கு 2010-ல் அறிமுகம் செய்யப்படும் போது ரத்தன் டாடா குஜராத் அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினார். ரத்தன் டாடா கூறுகையில் "நானோ கார் தொழிற்சாலைக்கு நாங்கள் வேறு இடம் தேடிய போது, அமைதியான இணக்கமான ஒரு இடத்தை தேடிக்கொண்டு இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து குஜராத் அரசு தயாராக இருந்தது. இது டாடாவின் திட்டம் இல்லை. எங்கள் திட்டம் என்று மோடி என்னிடம் கூறினார்.
எங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்றார். இந்தியாவின் கார் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த நானோ கார்களுக்கு எதிபார்த்த வெற்றி என்பது கிடைக்கவில்லை. இதனால், 2018-ஆம் ஆண்டு இந்த நானோ கார்கள் தயாரிக்கும் திட்டத்தை டாடா கைவிட்டது.












Click it and Unblock the Notifications