Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தல்: வெள்ளித்திரையில் வரும் புது அறிவிப்பு! கணித்த சிதம்பரம்! மக்களுக்கு ஜாக்பாட்டா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெள்ளித்திரையில் மத்திய அரசு வெளியிடலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கணித்துள்ளதோடு விமர்சனமும் செய்துள்ளார்.

மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

After the gas cylinder price reduction may petrol, diesel prices are likely to come down, says P Chidambaram

ஆனால் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி உருவாகாது என பாஜகவினர் நினைத்தனர். ஆனால் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளன.

இருப்பினும் பாஜக மனம் தளரவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ரக்ஷா பந்தனையொட்டி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.200 மானியம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் சிலிண்டர் விலை ரூ. 400 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு என்பது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

After the gas cylinder price reduction may petrol, diesel prices are likely to come down, says P Chidambaram

இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து மக்களை ஏமாற்றி ஓட்டுகளை அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதோடு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளார்.

இதனால் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை நம்ப வேண்டாம். ஏனென்றால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கூட்டி விடுவார் என ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்(முன்பு ட்விட்டர்) பதிவில், ‛‛தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1,100 க்கு மேல் விலை வைத்து மக்களை கசக்கி பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு'' என குறிப்பிட்டு தாக்கியுள்ளார்.

அதாவது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் வருவதற்கான அறிகுறியாக உள்ளது. அந்த வரிசையில் விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் ஓட்டுக்காக மட்டுமே மத்திய அரசு விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக மறைமுகமாக ப சிதம்பரம் சாடியுள்ளார். இருப்பினும் ப சிதம்பரம் கூறுவது போல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும்பட்சத்தில் அது உண்மையில் மக்களுக்கு ஜாக்பாட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+