சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"செங்கல்பட்டு".. முதல்வர் நடத்திய ஒரே மீட்டிங்.. வேகமாக விரையும் பாரத் பயோடெக் டீம்.. அடி தூள்!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சந்திப்பு நடத்தினார்.

Recommended Video

    Tamilnadu-வில் தடுப்பூசி உற்பத்தி.. Bharat Biotech நிறுவனத்துக்கு முதல்வர் Stalin அழைப்பு

    தமிழ்நாட்டிலேயே கொரோனா வேக்சினை தயாரிக்கும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. மத்திய அரசு போதிய வேக்சின் ஒதுக்கீடு செய்யவில்லை என்பதாலும், வெளிநாட்டு டெண்டர் பெரிய அளவில் கைகொடுக்க வாய்ப்பு இல்லை என்பதால் சுயமாக வேக்சின் தயாரிக்கும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது.

    முதல்வர் ஸ்டாலின் இதற்காக பல்வேறு இடங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆஸ்டர் செனகா அதிகாரிகளை இரண்டு நாட்கள் முன்பு சந்தித்த முதல்வர் ஸ்டாலின் நேற்று பாரத் பயோடெக் அதிகாரிகளை சந்தித்தார்.

    சூப்பர்.. தமிழ்நாட்டிலேயே வேக்சின் உற்பத்தி.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் அதிரடி மீட்டிங்! சூப்பர்.. தமிழ்நாட்டிலேயே வேக்சின் உற்பத்தி.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் அதிரடி மீட்டிங்!

    ஆலோசனை

    ஆலோசனை

    தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சுஜித்ரா இலா, செயல் இயக்குனர் சாய் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டிலேயே வேக்சின் உற்பத்தி செய்வது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    என்ன கேட்டனர்

    என்ன கேட்டனர்

    தமிழ்நாட்டில் இதற்கான கட்டமைப்பு, பட்ஜெட், மாநில அரசின் உதவி எவ்வளவு தேவை, மூலப்பொருள் இறக்குமதி, மக்களுக்கு எப்படி எடுத்து செல்வது, மொத்த செலவு எவ்வளவு என்று பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர். செங்கல்பட்டு திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.

    ஆய்வு

    ஆய்வு

    இந்த நிறுவனத்தை தமிழ்நாடு அரசுடன் இணைந்து குத்தகைக்கு எடுக்க தயாரா என்று முதல்வர் ஸ்டாலின் பாரத் பயோடெக் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்துள்ளார். மத்திய அரசின் இந்த நிறுவனத்தை தமிழக அரசு குத்தகைக்கு கேட்டுள்ளது.தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு இன்னும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.

    தனியார்

    தனியார்

    தனியாருடன் இணைந்து இதை நடத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் இந்த விஷயத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. விரிவான ஆலோசனைக்கு பின் பாரத் பயோடெக் நிறுவனம் தனது முடிவை எடுக்க போகிறது என்கிறார்கள். அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் இன்று செங்கல்பட்டு செல்கிறது.

    பாரத் பயோடெக்

    பாரத் பயோடெக்

    எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாரத் பயோடெக் ஆய்வு செய்ய உள்ளது. இங்கு கோவாக்சின் தயாரிக்க வசதி உள்ளதா. இங்கு வேகமாக உற்பத்தி செய்ய முடியுமா என்று ஆலோசனை செய்ய உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்த உற்பத்தி மையத்தை பாரத் பயோடெக் குத்தகைக்கு எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    After the Tamilnadu CM M K Stalin meeting, Now Bharat Biotech goes to the Chengalpattu HLL vaccine production center.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X