விஜய் வீடியோவில் பேசியதுமே.. களத்தில் இறங்கும் தவெகவினர்.. SIRக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்!
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்கு (SIR) எதிராக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இன்று தவெக தலைவர் விஜய், SIR நடவடிக்கையைக் கண்டித்து வீடியோ வெளியிட்ட நிலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், SIR பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள்.

இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தவெக இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளதாகவும், நாம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
"இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்குற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லனு சொன்னா நம்புவீங்களா? நான், நீங்க உட்பட யாருக்குமே அது இல்ல. நான் பயமுறுத்தறதா நினைக்காதீங்க. அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தா நம்மள மாதிரியே இன்னும் லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமைதான். ஓட்டு போடுற உரிமையே இல்லாத மாதிரி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம். இதுக்கு முக்கிய காரணம் அந்த SIR சிறப்பு தீவிர திருத்தம்." எனப் பேசியிருந்தார் விஜய்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை 16.11.2025 காலை 11 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும். கட்சித் தலைவர் விஜயின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்!












Click it and Unblock the Notifications