'அகரம்' வெற்றி.. சமூகத்தை வழி நடத்தும்! சூர்யாவை பாராட்டிய எம்.பி கமல்ஹாசன்
சென்னை: அகரம் பவுண்டேஷன் மூலம் அதிகாரம் பெற்ற ஒவ்வொருவரும், சமூகத்தை வழிநடத்தவும், எண்ணற்றோரை மேம்படுத்தவும், அடுத்த தலைமுறையில் மாற்றத்தை உருவாக்கவும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று, நடிகர் சூர்யாவுக்கு மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த அவர் விடுத்துள்ள அறிக்கையில், " சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, மதிப்பிற்குரிய அப்பா சிவக்குமார் அண்ணா, அம்மா லட்சுமி அண்ணி என அனைவரும் எல்லா வகையிலும் எனது குடும்பமாகவே கருதுகிறேன். அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டுகால கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக இருந்தது, என்னுள் ஆழ்ந்த உணர்வுகளை ஏற்படுத்திய ஒரு மகிழ்ச்சியான தருணம்.

அகரம் அறக்கட்டளையிலிருந்து உருவாகி வரும் மருத்துவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஆகியோர் தனிப்பட்ட வெற்றிகள் மட்டுமல்ல, சேவை மற்றும் இரக்கத்தின் மூலம் கல்வி எதை சாதிக்க முடியும் என்பதற்கு வாழும் சாட்சிகளாக உள்ளனர்.
சூர்யாவும், அகரம் குழுவினரும் அமைதியான ஒரு புரட்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு குழந்தையை, அதன் கனவை பக்குவப்படுத்துகிறீர்கள். உங்கள் அறக்கட்டளையின் பணி, எண்களால் அளவிடப்படாது, மாறாக அது ஏற்படுத்திய நீடித்த, உறுதியான மாற்றங்களால் அளவிடப்படும். அகரம் அறக்கட்டளையின் மூலம் வலுவூட்டப்பட்ட ஒவ்வொருவரும், மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக, சமூகங்களை மேம்படுத்துபவர்களாக, எண்ணற்ற பிறருக்கு உதவுபவர்களாக, வருங்கால தலைமுறைகள் முழுவதும் ஒரு மாற்றத்தின் அலையை உருவாக்குபவர்களாக மாறுகிறார்கள்.
உங்களின் முயற்சிகள் ஒரு நியாயமான மற்றும் முற்போக்கான இந்தியாவின் ஆன்மாவை உள்ளடக்கி உள்ளது. கல்வி எனும் ஒளியை, அர்ப்பணிப்புடன் கூடிய கைகளில் கொடுத்தால், பிறப்பு மற்றும் சூழ்நிலை சார்ந்த ஆழமான தடைகளை எப்படி அகற்ற முடியும் என்பதை அது வெளிப்படுத்துகிறது. வெறுமனே உயிர் வாழ்வதை தாண்டி கனவு காண்பதற்கும், மரியாதை, நோக்கம் மற்றும் சிறந்து விளங்குவதற்கும் பலருக்கு தைரியத்தை கொடுத்துள்ளீர்கள்.
உங்களின் நோக்கம் மற்றும் நம்பிக்கையில் ஒரு உறவினராகவும், மக்களின் பிரதிநிதியாகவும், நாம் இருவரும் நேசிக்கும் இந்த குடியரசின் சக குடிமகனாகவும், உங்களின் இந்த உன்னத பணிக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். உங்களின் குடும்பம், நமது அன்புக்குரிய தமிழகம் உங்கள் மீது பொழிந்த அன்பை, நன்றியுடன் திரும்பக் கொடுத்துள்ளது.
காலப்போக்கில், உங்கள் பெயர் திரைகளிலும் மேடைகளிலும் ஒளியூட்டியதுடன், நீங்கள் வாழ்க்கையை மேம்படுத்தியவர்களின் வெற்றிகளிலும், நீங்கள் ஏற்றிய ஒளியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தலைமுறைகளிலும் கூட அது நீடித்து நிலைத்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதேபோல அதன் விதை திட்டம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதற்காக நேற்று சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசியிருந்தது மிகுந்த கவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!











Click it and Unblock the Notifications