அதிமுக பொன்விழா ஆண்டிலும் வரலாறு படைப்போம்... வாகை சூடுவோம் - ஓபிஎஸ் சபதம்
பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம்! என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கழக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம்!! என்று துணை முதல்வர் ஒபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2021ஆம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னை தலைமை செயலகத்தில் அதிமுகவின் 49ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கட்சி கொடியை ஏற்றி வைத்து வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மாவட்ட கட்சி அலுவலகங்களில் அதிமுக கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் இன்றைய தினத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பொன் விழா ஆண்டிலும் அதிமுக அரசு ஆட்சியை பிடித்து சாதனை படைக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சொந்த ஊரில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து அதிமுக தொடக்க நாளினை கொண்டாடினார். அதே நேரத்தில்
அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் கழகத்தின் 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம்!! என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், உண்மையும் உழைப்பும் இருந்தால் பதவிகளும், உதவிகளும் தொண்டர்களை தேடி வரும் என்று வெளிப்படையாக காட்டிக்கொண்டிருக்கும் இயக்கம் அதிமுக. இன்று நமது எண்ணங்களில் நிறைந்திருக்கும் சொல் ஒன்றுதான் அதுதான் வெற்றி. நாம் மேற்கொள்ள வேண்டிய அதுதான் வெற்றிக்கு பாடுபடும் உழைப்பு என்று தொண்டர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications