என்டிஏ கூட்டணியில் இணையப் போகும் புதிய கட்சி? பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக நிர்வாகிகள்!
சென்னை: அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் புதிய கட்சி விரைவில் இணைய உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறி இருக்கின்றனர். புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வரும் சூழலில், அதிமுக நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. இதன்பின் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

இதன்பின் பாமக அன்புமணி தரப்புடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை அமைத்தார். இதையடுத்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனின் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாசிட்டிவ் சிக்னல் கொடுத்தார். தொடர்ந்து ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற அத்தனை தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரிவேந்தர் மட்டும் தாமதமாக வந்ததால், அவர் மேடையில் இல்லை. இருந்தாலும் அதிமுக தரப்பில் இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
குறிப்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருடன் அதிமுக பேசி வருகிறது. பிரேமலதா இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்க வேண்டும், ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டு டிமாண்ட் வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி 9 தொகுதிகள் வரை ஒதுக்கலாம், ராஜ்ய சபா சீட் உத்தரவாதம் அளிப்போம் என்று சொல்வதாக தெரிகிறது.
இதனால் அதிமுக நிர்வாகிகள் முதலில் கிருஷ்ணசாமியை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இருந்து நான் வெளியேறிவிட்டான் என்று சொன்னேனா என்று கேள்வி எழுப்பி கிருஷ்ணசாமி, கூட்டணிக்கான சமிக்ஞைகளை கொடுத்துவிட்டார். இதன்பின் அதிமுகவினரும் கிருஷ்ணசாமியை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விரைவில் கிருஷ்ணசாமியுடனான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமாக உள்ளனர். இதனால் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் வரை கொடுக்க அதிமுக முடிவு எடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications