அதிமுக, திமுக பதவிகளில் உள்ளவர்கள் டெண்டர் ஊழல்.. ரஜினிகாந்த் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: திமுக, அதிமுக கட்சிகளில் பதவிகளில் உள்ளவர்கள், டெண்டர் ஊழல் செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார்.
Recommended Video
2017-ல் அரசியலுக்கு வரும்போது சிஸ்டம் கெட்டுப் போயிருக்கிறது- மக்கள் மனதில் மாற்றம் உருவாக்க வேண்டும் என கூறினேன்.
முதலில் அரசியல் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சில திட்டங்கள் வைத்திருக்கிறேன்.

திமுக, அதிமுகவில் பூத் கமிட்டி தவிர 60,000 கட்சி பதவிகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில்தான் இவர்கள் தேவை. இவர்கள் ஓட்டு, இவர்கள் நண்பர்கள், குடும்ப ஓட்டு அந்த கட்சிகளுக்கு போகிறது. அதன்பிறகு, அந்த பதவி தேவை கிடையாது. ஆனால், எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சியில் பதவியில் உள்ள இவர்கள், டெண்டர்கள் பலவற்றில் ஊழல் செய்கிறார்கள். எல்லாரையும் சொல்லவில்லை. சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இப்போ ஒரு கல்யாணம் நடக்கிறது.
அப்போது, பல வேலையாட்கள் தேவை. சமையல்க்காரர், கார் ஓட்டுனர் என பல பணியாட்கள் தேவை. ஆனால், கல்யாணம் முடிந்த பிறகு அது தேவையா? அப்படித்தான், இந்த பதவிகள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை. தேர்தல் நேரத்தில் பணியாற்றிவிட்டு பிறகு அந்த பதவிகளை கலைத்துவிடலாம் என்பதே எங்கள் திட்டம். பதவிதான் தேவை என வருவோர் எனது கட்சிக்கு வேண்டாம். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications