லோக்சபா தேர்தல் 2024: அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்கள்- முழு விவரம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதிமுக அணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக முதல் கட்டமாக நேற்று 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இன்று 2-வது கட்டமாக புதுவையுடன் சேர்த்து எஞ்சிய 17 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர்களை அறிவித்தது.
தமிழ்நாடு, புதுவையில் 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள்:
1.வடசென்னை - ராயபுரம் மனோ
2.தென்சென்னை - ஜெயவர்த்தன்
3.காஞ்சிபுரம் - ராஜசேகர்
4.அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
6.ஆரணி - கஜேந்திரன்
7.விழுப்புரம் - பாக்யராஜ்
8.சேலம் - விக்னேஷ்
9.நாமக்கல் - தமிழ்மணி
10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11.கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
12.சிதம்பரம் - சந்திரஹாசன்
13.நாகை - சுர்ஜித் சங்கர்
14.மதுரை - சரவணன்
15.தேனி - நாராயணசாமி
16.ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17.கோவை - சிங்கை ராமச்சந்திரன்
18.பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
19.திருச்சி - கருப்பையா
20.பெரம்பலூர் - சந்திரமோகன்
21.மயிலாடுதுறை - பாபு
22.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
23.தருமபுரி - அசோகன்
24.திருப்பூர் - அருணாசலம்
25.நீலகிரி - லோகேஷ்
26.வேலூர் - பசுபதி
27.திருவண்ணாமலை - கலியபெருமாள்
28.கள்ளக்குறிச்சி - குமரகுரு
29.சிவகங்கை - சேவியர் தாஸ்
30.நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
31.புதுச்சேரி - தமிழ்வேந்தன்
32.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
33.கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவற்றில் திமுகவுடன் நேரடியாக 18 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மோதுகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் 3 தொகுதிகளில் அதிமுக நேரடியாக மோதுகிறது.
திமுக- அதிமுக நேரடியாக மோதும் 18 தொகுதிகள்:
1.வடசென்னை
2.தென்சென்னை
3.ஸ்ரீபெரும்புதூர்
4.காஞ்சிபுரம்
5.அரக்கோணம்
6.வேலூர்
7.தர்மபுரி
8.திருவண்ணாமலை
9.ஆரணி
10.கள்ளக்குறிச்சி
11.சேலம்
12.ஈரோடு
13.நீலகிரி
14.கோவை
15.பொள்ளாச்சி
16.பெரம்பலூர்
17.தேனி
18.தூத்துக்குடி












Click it and Unblock the Notifications