அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. இதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தற்போது அதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில், கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ் பி வேலுமணி மற்றும் வளர்மதி அகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த சூழலில் ஆளும் தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தி வருகிறது. முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கும் 2 தொகுதிகள், காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், 28 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள், கொ.ம.தே.க.வுக்கு நேற்று 2 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது திமுக.

புதிய வரவாக இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் மட்டும் ஒதுக்கியுள்ள நிலையில் அடுத்ததாக எத்தனை தொகுதியில் போட்டி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. 10 இடங் கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்திய கம்யூ னிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்காக திமுகவில் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவை அந்தந்த கட்சியின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள். தொகுதிகள் குறைத்து வழங்கப்படும் என்று கூறப் பட்டதால், கம்யூனிஸ்டு கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதற்கு மத்தியில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கான தொகுதி பங்கீடு மற்றும் இடங்களை இறுதி செய்வதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க. தலைமையிலான என்.டிஏ கூட்டணியில் பா.ஜக, பாமக (அன்புமணி ராமதாஸ்), அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன் னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பார தம் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக் கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடந்து வந்தாலும், இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படாமல் இருந்து வருகிறது.
விஜய் கூட்டணிக்கு வந்தாலும் வருவார் என்பதால் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்யாமல் அதிமுக தலைமை நிதானம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுகவில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தற்போது அதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த க்குழுவில், கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ் பி வேலுமணி மற்றும் வளர்மதி அகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications