சசிகலா காலில் சிவி சண்முகம் விழுந்தது, பகல் குடிகாரர் என பொன்னையன் பேசியது உண்மை-பெங்களூர் புகழேந்தி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகம், சசிகலாவின் காலில் விழுந்தது மற்றும் அவரை பகல் நேர குடிகாரர் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் தமக்கு அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸை சிவி சண்முகம் வாபஸ் பெற வேண்டும் என்றும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி பதிலளித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்திக்கு, சிவி சண்முகம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை வழக்கறிஞர் கௌதம் மூலமாக அனுப்பி இருந்தார். அதில் சிவி சண்முகம் பகல் குடிகாரர் என்றும் சசிகலா காலில் விழுந்தார் என்றும் புகழேந்தி பேசினார்; இது அவதூறு வழக்கிற்கு உட்பட்டது. ஆகையால் உங்கள் மீது ஏன் வழக்கு தொடரக்கூடாது என அந்த நோட்டீஸ் மூலம் கேட்கப்பட்டது.

சிவி. சண்முகம் அனுப்பிய இந்த வக்கீல் நோட்டீசுக்கு புகழேந்தி வழக்கறிஞர் திருமூர்த்தி பதில் அளித்துள்ளார் அதில், வி.கே. சசிகலா காலில் சிவி சண்முகம் விழுந்ததற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவரை பகல் குடிகாரர் என மூத்த அண்ணா திமுக தலைவர் முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன், அண்ணா திமுக நிர்வாகி கோலப்பனிடம் என கூறியதாகவும் அது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது; செய்தித்தாள்களிலும் வந்தது அதனைத் தான் நான் பொன்னையன் அவர்களிடமே சிவி சண்முகத்தை பற்றி கேட்டுக் கொள்ளுங்கள் என கூறியதாகவும் தனது பதிலில் கூறியிருக்கிறார்.
மற்ற தலைவர்களை அசிங்கமாக பேசுவதும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் சிவி. சண்முகத்திற்கு கைவந்த கலை; இதற்குரிய ஆதாரங்களை புகழேந்தி வைத்திருப்பதாகவும் ஆகையால் சிவி சண்முகம் அனுப்பிய அவதூறு நோட்டீஸ் காரணம் இல்லாதது ஆதாரமற்றது; எனவே உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இல்லையேல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் எனவும் புகழேந்தி தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications