ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.. எடப்பாடியிடம் அமித்ஷா நீட்டிய லிஸ்ட்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றன. அதே நேரத்தில் பாஜகவின் நிபந்தனைகளால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என 39 சீட்டுகளை பாஜக கேட்ட நிலையில் தற்போது கூடுதல் நிபந்தனை விதித்துள்ளது. அதாவது தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீக தலங்கள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பழனி, ஸ்ரீரங்கம், மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் குறுகிய காலத்தில் உடைந்து உடைந்து சேர்ந்த கூட்டணி என்றால் அது அதிமுக பாஜக கூட்டணி தான். 2019 ஆம் ஆண்டிலிருந்து திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணி அப்படி அல்ல. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில் 2021 தேர்தலில் அந்த கூட்டணி மீண்டும் போட்டியிட்டது. அதிலும் தோல்விதான்.

அதற்குப் பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. சமீபத்தில் 2024 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுக பாஜக தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் இரு கட்சிகளுமே மண்ணைக் கவியது.
அதிமுக பாஜக கூட்டணி
இதை அடுத்து வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஓரளவு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதுகிறது. இதை அடுத்து தேர்தலுக்கு நீண்ட காலம் இருப்பதற்கு முன்னதாகவே அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தார் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலாவி வருகிறது. குறிப்பாக 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
மேலும் முப்பது தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான தகவலின் படி ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகள் கூடுதலாக சீட்டுகளை தர வேண்டும் எனவும் 40 சீட்டுகளுக்கு மேல் பாஜக எதிர்பார்க்கிறது என தகவல் வெளியானது.
அமித்ஷா சந்திப்பு
ஆனால் 20 சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது மேலும் ஒரு தகவல் ஆனது வெளியாகி உள்ளது. அதாவது ஆன்மிக நகரங்கள், பாஜக செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் அதிக தொகுதிகளை பாஜக கேட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஒரு லிஸ்ட்டை அமித்ஷா தமிழக பாஜக தரப்பு மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதில் பெரும்பாலானவை அதிமுக வசம் அல்லது அதிமுக வலுவாக இருக்கும் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகத் தொகுதிகள்
அந்த வகையில் காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, ஸ்ரீரங்கம், மதுரை, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அங்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடலாம் என தயாராகி வரும் நிலையில் புதுக்கதையாக புகழ்பெற்ற கோவில்கள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்பது அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இந்த பட்டியலுக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை எனவும், எதுவாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அவர் திட்டவட்டமாக கூறியதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications