ஜெயலலிதா மறைவுக்கு பின்! "இந்த முக்கிய அரசியல் முடிவு" சென்னை கிரவுன் பிளாசாவில் எடுக்கப்பட்டதாமே!
சென்னை: டிசம்பர் 20ஆம் தேதியுடன் மூடப்படும் சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில்தான் பல முக்கிய அரசியல் நிகழ்வுகளும் முடிவுகளும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் ஏராளமான நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. குடியரசுத் தலைவர் முதல் உலக தலைவர்கள், போப் ஆண்டவர், வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்ளூர், வெளியூர் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என சென்னையில் உள்ள முக்கிய ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவது வழக்கம்.

அந்த வகையில் மிகவும் பழமையான ஹோட்டல் என்றால் ஹோட்டல் கிரவுன் பிளாசாதான். இது சென்னையின் முக்கிய மற்றும் காஸ்ட்லி இடமான ஆழ்வார்பேட்டையில் உள்ள சேமியர்ஸ் சாலையில் உள்ளது.
இந்த ஹோட்டலின் பரப்பளவு சுமார் ஒன்றரை ஏக்கர் ஆகும். இந்த இடத்தில் இதன் உரிமையாளர் முதலில் டிடி வாசு அடையார் கேட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்கினார். இதையடுத்து இந்த ஹோட்டலை கோயல் குழுமம் விலைக்கு வாங்கியது. பிறகு ஐடிசி நிறுவனம் வாங்க பார்க் ஷெரட்டன் என்றும் பின்னர் கிரவுன் பிளாசா என்றும் பெயர் மாற்றங்கள் நடந்துள்ளன.
மேற்கண்டவாறு பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இந்த ஹோட்டல் அடையார் கேட் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு 287 அறைகள் உள்ளன. இங்கு பட திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடந்துள்ளன. இந்த நட்சத்திர விடுதி வரும் டிசம்பர் 20 ஆம் தேதியுடன் மூடுவிழா காணவுள்ளதாக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
38 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஹோட்டலை பாஷ்யம் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இங்கு ஒரு கிரவுண்ட் நிலம் 10 முதல் 12 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த இடத்தில் 130 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட போகிறது. ஒவ்வொன்றும் 5000 முதல் 7000 சதுர அடியில் இருக்கும். அவை கட்டி முடித்தவுடன் ஒரு சதுர அடி ரூ 30 ஆயிரம் என்றும் ஒரு அபார்ட்மென்ட் 15 கோடி முதல் 21 கோடிக்கு விற்பனை ஆகும் என்றும் தெரிகிறது.
அனைத்து தளங்களின் மொத்த பரப்பளவு குறியீட்டுக்கான தமிழக அரசின் அனுமதிக்காக பாஷ்யம் காத்திருக்கிறது. ஒரு வேளை கிடைத்துவிட்டால் ஒரு சதுர அடியை ரூ 50000 க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதியுடன் மூடப்படும் நிலையில் இங்கு நடந்த நிகழ்வுகள் குறித்து அசைப்போடப்படுகிறது.
அதாவது 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு இந்த ஹோட்டலில்தான் ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கையான பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதற்கு மாறாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி எடுத்ததாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் அந்த தேர்தலில் பாமக, தேமுதிகவுக்கு தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டன. அப்போது அதிமுக 20 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் பாமக 7 இடங்களிலும் தேமுதிக 4 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் அதிமுக மட்டும் ஒரு இடத்தில் வென்றது. மற்ற அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்தன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications