எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது.. உறுதி செய்த ஜெயக்குமார்!
அதிமுக - பாஜக இடையே எந்த மோதலும் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக - பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை என்றும், தங்களின் கூட்டணி தொடர்வாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்குவது குறித்து விவாதித்ததாக கூறிய ஜெயக்குமார், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை தவிர்த்து யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார்.
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் தீர்மானங்கள் செல்லுமா என்பது குறித்து தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இதனால் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக ஆலோசனை கூட்டணி நிறைவு
இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எதிர்கொள்வது, பொதுச்செயலாளர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் கட்சிப் பணிகள் குறித்து விவாதித்தோம். பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்
பின்னர் பாஜகவுடனான மோதல் போக்கு பற்றிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து நேற்றே பேசிவிட்டோம். இதுபோல் எதிர்காலத்தில் இருக்காது என்று நம்புகிறேன். பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை. ஐடி விங் தரப்பில் சில பக்குவப்படாத கருத்துகள் பகிரப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தே வருகிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி. இது தொடரும். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்தார்.

அண்ணாமலை பற்றி ஜெயக்குமார்
தொடர்ந்து, ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு தாய் மற்றும் மனைவியை பற்றி அண்ணாமலை பேசிய கருத்து பற்றிய கேள்விக்கு, அது அவரின் தனிப்பட்ட கருத்து. யாரும் ஜெயலலிதாவை போல் வர முடியாது. அவரின் தாய், மனைவியை உயர்த்தி பேசுவது தனிப்பட்ட கருத்து. எங்கள் தலைவருக்கு நிகரானவர்கள் எங்கும் கிடையாது என்று கூறினார்.

ஓபிஎஸ் கடை நடத்துகிறார்
அதேபோல், செந்தில் முருகனை ஓபிஎஸ் நீக்கியது பற்றிய கேள்விக்கு, ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை. அவர் ஒரு கடையை தான் நடத்தி வருகிறார். அதனால் அவர் கட்சியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. 99 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றிக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை தவிர்த்து யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார்.

ஆன்லைன் ரம்மி விவகாரம்
தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி விவகாரம் பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மியை முழுமையாக தடை செய்ய வேண்டும். அதனால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதனால் அதிமுகவின் நிலைப்பாடு தடை செய்ய வேண்டும் என்பதுதான். திமுக அவசர அவசரமாக பதில் அனுப்பியதன் விளைவு தான் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மசோதா நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். தற்போது உடனடியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து மீண்டும் மசோதாவை அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications