சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமனுடன் எஸ்பி வேலுமணி சந்திப்பு- அண்ணாமலையுடன் ஆலோசனை!
சென்னை: தமிழ்நாடு வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார். மேலும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் தமது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியது பெரும் விவாதப் பொருளானது. அதிமுக, பாஜக தலைவர்கள் இருதரப்பும் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சென்றது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலகக் குரல் வேகம் குறைந்தது.
மேலும் தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து அத்தனை பஞ்சாயத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அதிமுக தலைவர்களும் பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்து பேசி வருகின்றனர்.
இந்த பின்னணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு வருகை தந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications