Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதிமுக-பாஜக கூட்டணி" அண்ணாமலை இன்னும் ராஜினாமா செய்யவில்லையே.. கொளுத்தி போடும் காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வீர்கள் என்று சொன்னீர்கள். இன்னும் நீங்கள் ராஜினாமா செய்யவில்லை என்று அண்ணாமலையை சீண்டும் வகையில் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என பொருள்படும்படியாக ஒரு கருத்தை அண்ணாமலை கூறியது இந்த மோதல் பகிரங்கமாக வெடிக்க காரணமாக இருந்தது. அண்ணாமலையின் இந்த கருத்தை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

AIADMK-BJP alliance, why Annamalai not resign from his post Gayathri Raghuram slams

ஜெயலலிதாவை பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என அதிமுகவினர் தெரிவித்திருந்தனர். அதிமுக - பாஜகவினர் இடையே வார்த்தை யுத்தம் அதிகரித்தது. இதனால், அதிமுக- பாஜக இடையே கூட்டணி நீடிக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்காக டெல்லி சென்ற எடப்பாடிக்கு பிரதமருக்கு பக்கத்தில் அமரும்படியான வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இதனால், அதிமுக - பாஜக இடையே இருந்த பகைமை சிறிது அணைந்திருந்தது. இந்த நிலையில் என் மண் என் மக்கள் எனும் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசிய பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் அண்ணாமலை அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்திருந்தார். அண்ணாமலை பேசியதாவது:-

1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 10 நாட்கள் ஒரு தமிழ் மாநாட்டின் 4ஆம் நாளன்று அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்த அண்ணாதுரை பார்வதி தேவியை விமர்சித்திருந்தார். அடுத்த நாள் மேடைக்கு வந்த முத்துராமலிங்கத் தேவர், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து பார்வதி தேவியை பேசியது யார் என கேள்வி எழுப்பினார். எல்லாரும் நெளிந்தனர்.

AIADMK-BJP alliance, why Annamalai not resign from his post Gayathri Raghuram slams

அண்ணாதுரையை மதுரையில் ஒளித்து வைத்திருந்தார்கள். அவரால் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை பார்வதி தேவி குறித்து கடவுளை நம்ப மறுப்போர் பேசினால் ரத்த அபிஷேகம் நடக்கும் என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தார் அண்ணாதுரை. இவ்வாறு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு மீண்டும் அதிமுக - பாஜக இடையேயான மோதலுக்கு வித்திட்டுள்ளது. அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எச்சரிக்கும் வகையில் பேசியதும் இதற்கு சூட்டோடு சூட்டாக அண்ணாமலை கொடுத்த பதிலடியும் மீண்டும் அதிமுக - பாஜக இடையேயான வார்த்தை யுத்தம் உச்ச கட்டத்தை எட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "கூழைக் கும்பிடு போட்டுலாம் கூட்டணில இருக்க மாட்டோம் , அது என் தன்மான பிரச்சனை .." - 420 மலை. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வீர்கள் என்று சொன்னீர்கள். இன்னும் நீங்கள் ராஜினாமா செய்யவில்லை.

தன்மான பிரச்சனை அனைத்தும் அப்போவே போய்விட்டது 420. பாவ யாத்திரைக்கு வசூல் என்ன ரெடி செய்வது என்பது எங்களுக்குத் தெரியும். பத்திரிகை முன் உட்கார்ந்து அதிமுக & தமிழ்நாட்டின் தலைவர்களை பற்றி தவறாக பேசுகிறீர்கள். மக்கள் உங்களை எப்படி துரத்தப் போகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். எப்படி நீ கும்பிடு வைப்பீர்கள் என்று பார்க்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+