அமித் ஷாவிற்கு விருந்த தந்த எடப்பாடி.. முகத்தை திருப்பிக்கொண்ட ஜெயக்குமார்.. விழப்போகும் விக்கெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி உறுதியும் இறுதியும் செய்யப்பட்டதை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் கொடுந்த இரவு விருந்தில் கலந்து கொண்டார் அமித் ஷா. இந்த விருந்தில் கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் பலரும் பங்கேற்றனர்.

எடப்பாடிக்கு சென்னையில் வலது கரமாக இயங்கியவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த விருந்தில் கலந்து கொள்ள ஜெயக்குமாரை அழைக்க வேலுமணியிடம் எடப்பாடி கேட்டு கொண்டுள்ளார். ஜெயக்குமாரை தொடர்புகொண்டு வேலுமணி அழைக்க, பெர்சனல் விசயமா முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறேன் என்று சொல்லி விருந்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டாராம் ஜெயக்குமார்.

annamalai Edappadi Palaniswami

அமித் ஷாவை சந்திக்க டெல்லிக்கு தன்னைத் தவிர்த்து மற்றவர்களை எடப்பாடி அழைத்துச் சென்றதும், பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லாததும் தான் எடப்பாடி அழைத்தும் அமித் ஷாவுக்கான விருந்தினை புறக்கணித்தார் ஜெயக்குமார் என்கின்றனர். ஜெயக்குமார் இந்த கூட்டணியை நேரடியாக சில முறை எதிர்த்து உள்ளார். மறைமுகமாகவும் சில முறை இந்த கூட்டணியை எதிர்த்து உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் இந்த கூட்டணி பற்றி இதுவரை கருத்து சொல்லவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.

கூட்டணி உறுதி

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, என்றுள்ளார்.

அதிமுக கூட்டணி சாதகம்

அதிமுக இழந்த முக்குலத்தோர் வாக்குகள் பாஜக தலைவர் நயினார் வழியாக மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வரும். கவுண்டர் என்ற பிரிவினருக்கான கூட்டணி என்று இல்லாமல் இப்போது தெற்கிலும் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வளர முடியும். அண்ணாமலை இருந்திருந்தால் இதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும். திமுக ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் உள்ளன. இப்போது அமித் ஷா பேச்சு மூலம் டெல்லி ஊழல் வழக்குகளை கையில் எடுக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இது திமுகவை பாதிக்கும் பட்சத்தில் டெல்லி ஆதரவோடு இங்கே அதிமுக - பாஜக கூட்டணி அடித்து ஆடும் வாய்ப்புகள் உள்ளன. இது எடப்பாடிக்கு சாதகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

எடப்பாடி வலுவான கூட்டணியை அமைத்துவிட்டார் என்பதால்.. கட்சி உறுதியாக இனி அவருடன் நிற்கும். இதன் காரணமாக அதிமுக மீண்டும் உட்கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் தேர்தல் பணிகளை, தேர்தல் நடவடிக்கைகளை செய்ய தொடங்கும். இது எதிர்க்கட்சிகளுக்கு எழுச்சியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+