அதிமுகவில் ஆர்.பி.உதயகுமாரின் அதிரடி வளர்ச்சி.. கிளைச் செயலாளர் மகன் டூ எதிர்க்கட்சி துணைத் தலைவர்
சென்னை: தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாதாரண கிளைச் செயலாளர் மகனாக அரசியலில் என்ட்ரி கொடுத்த உதயகுமார், இன்று தமிழக அரசியல் மற்றும் அதிமுக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.
அவரது பின்னணி பற்றியும் கடந்து வந்த அரசியல் பாதை பற்றியும் இங்கே பார்க்கலாம்.

வழக்கறிஞர்
மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகர் அதிமுக கிளைச் செயலாளராக இருந்த போஸ், தனது மகன் ஆர்.பி.உதயகுமாரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற ஆசையில் சட்டம் படிக்க வைத்தார். சட்டப் படிப்பு முடிந்த கையோடு நீதிமன்றத்துக்கு வழக்கு தொடர்பாக பிராக்டீஸ் செய்ய செல்வார் என்று பார்த்தால் அதிமுக நிகழ்ச்சிகளில் அரசியல் பிராக்டீஸை தொடங்கினார் உதயகுமார். சுறுசுறுப்பும் -பணிவும் அவருக்கு சசிகலாவின் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷின் அறிமுகம் பெற்றுத் தந்தது.

சட்டமன்றத் தேர்தல்
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட, திமுக ஆட்சி செய்த அந்த 5 ஆண்டுகளும் மனம் தளராமல் அதிமுகவை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார் உதயகுமார். இந்த தகவலை டாக்டர் வெங்கடேஷ் மூலம் ஜெயலலிதாவின் கவனத்திற்கும் அவ்வப்போது கொண்டு செல்வதில் கவனமாக இருந்தார். அதோடு மாணவரணியிலும் முக்கியப் பொறுப்பை பெற்று அரசியல் கிராஃபை உயர்த்திக்கொண்டே சென்றார்.

2011-ல் சீட்
விருதுநகர் மாவட்டத்தில் சிவசாமி என்ற நிர்வாகி மீதிருந்த கோபம் காரணமாக அவருக்கு பதில் சாத்தூர் தொகுதியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கினார் ஜெயலலிதா. திமுகவின் சக்தி வாய்ந்த நிர்வாகிகளில் ஒருவரான சாத்தூர் ராமச்சந்திரனை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த அவருக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஆனால் எல்லாம் சில மாதங்கள் மட்டுமே.

ஓவர் பெர்ஃபார்மன்ஸ்
காரணம் இவரது ஓவர் பெர்ஃபார்மன்ஸ் ஜெயலலிதாவை எரிச்சல் அடைய வைத்தது. சட்டமன்றத்திற்குள் செருப்பு அணியாமல் சென்றது, ஜெயலலிதா செல்லும் வழியில் 10 கிமீ தூரத்திற்கு டியூப் லைட்களை கட்டி வாங்கிக் கட்டிக் கொண்டது என இவருக்கு சறுக்கல்கள் தொடங்கின. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஆர்.பி.உதயகுமார் ஓவர் பெர்ஃபார்மன்ஸை கைவிட்டு விட்டு அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். டாக்டர் வெங்கடேஷ் மூலம் சில மாதங்கள் கழித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரானர் ஆ.ர்.பி.உதயகுமார்.

சின்னம்மா என குரல்
அமைதியாக முதல் டெர்ம் அதிமுக ஆட்சியை நிறைவு செய்த அவர் 2016-ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது மீண்டும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சின்னம்மா தான் முதலமைச்சராக வர வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் வேறு யாருமல்ல இதே ஆர்.பி.உதயகுமார் தான். ஓ.பன்னீர்செல்வத்தை அவமானம் செய்யும் விதமாக தொடர்ந்து சின்னம்மா சின்னம்மா என குரல் கொடுத்து வந்தார்.

பாரத் நெட்
ஆனால் அப்படிப்பட்ட அவரே அரசியல் காலச்சக்கர ஓட்டத்தால் இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இது தனிக்கதை. அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமாரின் பெயர் அடிபடத் தொடங்கியது. விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிரச்சனையை வில்லங்கமில்லாமல் தனது சாதுர்யத்தால் முடித்தார். இது அவர் மீதான நம்பிக்கையை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கச் செய்தது.

முக்குலத்தோர்
ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்த பல முறை தனது தூதுவராக ஆர்.பி.உதயகுமாரை அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி. பேசிப் பேசி டயர்டு ஆன உதயகுமார், இனி அவர் வீட்டுக்கு நான் செல்ல மாட்டேன், பொதுக்குழுவை கூட்டுங்கள் பார்த்துக்கொள்வோம் என ஒரே அடியாக எடப்பாடி பழனிசாமி பக்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். முக்குலத்தோர் சமுதாயத்தின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் இன்று ஆர்.பி.உதயகுமாரை அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications