தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன்மா.. உடைந்து அழுத அதிமுகவின் ராஜாரகுபதி.. பதறிய சசிகலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன் என சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி ராஜா ரகுபதி உடைந்து அழுத ஆடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    Sasikala Phone call: AIADMK தொண்டருக்கு ஆறுதல் கூறிய Sasikala

    இதுகுறித்து சென்னை அதிமுக தொண்டர் டாக்டர் ராஜாரகுபதிக்கு சசிகலா வீட்டிலிருந்து போன் செய்யப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் வணக்கம் நல்லாயிருக்கீங்களா? என சசிகலா கேட்கிறார்.

    அதற்கு ராஜாரகுபதி உங்களை நினைத்து நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன், தமிழக மக்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என அழுகிறார். அதற்கு சசிகலா, இல்லை இல்லை, அய்யோ நான் வந்துடுவேன், கவலைப்படாதீர்கள் என்கிறார்.

    தமிழகம்

    தமிழகம்

    நீங்கள் இல்லாமல் நாதியில்லாமல் தமிழகம் இருக்கிறது என தொடர்ந்து அழுகிறார் ராஜா ரகுபதி. கட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்ததோ அந்த அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அது போல் ஆட்சியையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எனது எண்ணம் என்கிறார் சசிகலா.

    தீக்குளிக்க

    தீக்குளிக்க

    அதற்கு ராஜாரகுபதி , நான் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன். நீங்கள் கேமராவில் பாருங்தள் அம்மா. என்னை போலீஸார் தடுத்துவிட்டார்கள் என்கிறார். அதற்கு சசிகலா, தீக்குளிக்க முயற்சித்தது நீங்கள்தான் என சொன்னார்கள். அதெல்லாம் செய்யக் கூடாது.

    விரைவில் வருவேன்

    விரைவில் வருவேன்

    கவலைப்படாதீங்கள். விரைவில் நான் வருவேன். கட்சி நன்றாக இருக்கும் என்கிறார். அதற்கு ராஜாரகுபதி, அம்மா நீங்கள் அந்க கோல்ட் கலர் லைட் போட்டுட்டு காரில் வரவேண்டும். உங்கள் முகத்தை பார்த்தால்தான் அனைவரும் சரணடைவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து ரோஜாப்பூ மாதிரி இருக்கும் உங்கள் முகத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.

    ஜாதகம்

    ஜாதகம்

    ஜாதக ரீதியில் தொண்டர்களை கட்டுப்படுத்த உங்கள் மூவருக்கு மட்டும்தான் அந்த அருள் உண்டு. சூரியனின் ஆட்சி உள்ளது உங்கள் ஜாதகம், அதனால் உங்களுக்குத்தான் அனைவரும் கட்டுப்படுவார்கள். மற்றவர்கள் அவசரத்தில் வந்தவர்கள். உங்களை நான் ஒரு முறை பார்க்க வேண்டும் என்கிறார்.

    கொரோனா தாக்கம்

    கொரோனா தாக்கம்

    அதற்கு சசிகலா, கொரோனா தாக்கம் குறையட்டும், நான் வருகிறேன், அனைவரையும் சந்திக்கிறேன். அதிமுக மீதான அதிருப்தியில்தான் மக்கள் அனைவரும் மாற்றுக் கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள். அம்மா வீட்டில் இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரங்க வீட்டில் சாப்பிடுவது போல் நீங்கள் இல்லாததால் அடுத்தவங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள். பிரச்சார வாகனத்தில் தங்க விக்கிரகம் போல் நீங்கள் ஜொலிக்க வேண்டும் என்றார் ராஜா ரகுபதி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+