"கழகத்தின் காவலரே".. குஷியின் உச்சத்தில் எடப்பாடி.. அதிமுக ஆபிசில் மாஸ் ஏற்பாடு.. குவிந்த தொண்டர்கள்

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை மீண்டும் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ராயப்பேட்டை அலுவலகத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகை புரிய உள்ளார். இந்த நிகழ்வை தொடர்ந்து அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவழியாக.. கன்னித்தீவு கதை முடிவிற்கு வந்துள்ளது. இது உண்மையான கன்னித்தீவு கதை அல்ல. அதிமுகவில் நடந்து வந்த கன்னித்தீவு கதை.

கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது. இத்தனை நாட்களாக அதிமுக யார் கையில் இருக்கிறது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்த தொண்டர்களுக்கு நிம்மதியான முடிவு கிடைத்து உள்ளது.

நிம்மதி

நிம்மதி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் நேற்று இந்த தீர்ப்பை வழங்கினார். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அற்புதமான தீர்ப்பு

அற்புதமான தீர்ப்பு

இந்த நிலையில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில், உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீதி, நேர்மை, தர்மம் வென்றுள்ளது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, என்று கூறினார். இந்த நிலையில் நேற்று நேரடியாக சென்று ஈரோட்டிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்றும் மாலை மீண்டும் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார். நாளையோடு பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி மாலை ஈரோட்டில் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்,

ஈரோடு

ஈரோடு

அதிமுக ராயப்பேட்டை அலுவலகத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி வருகை புரிய உள்ளார். இந்த நிகழ்வை தொடர்ந்து அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் சரியாக எடப்பாடி பழனிசாமி வழக்கில் வென்று இருக்கிறார். நேற்றுதான் ஜெயலலிதா கோவிலில் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வழிபாடு நடத்தினார். அதன்பின் திருமண நிகழ்வில் பேசிய எடப்பாடி, ஜெயலலிதா கோவிலில் இப்போதுதான் வழிபாடு நடத்தினேன். அதன் பயனாக உடனே தீர்ப்பு கிடைத்து உள்ளது. அந்த கோவிலின் சக்தியை பாருங்கள். எல்லாம் நன்றாக நடக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன். இப்போதுதான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எடப்பாடி கூறினார்.

மரியாதையை

மரியாதையை

இந்த நிலையில்தான் இன்று காலை 9.30 மணியளவில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளார். அங்கே ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்கிறார். இவரை வரவேற்க தற்போது தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கில் இன்று தொண்டர்கள் எடப்பாடியை வரவேற்க உள்ளனர். அதிமுக அலுவலகம் வாசலில் இதற்காக கழகத்தின் காவலர் என்ற பெயரில் வரவேற்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. மேள தாளங்களோடு பிரம்மாண்ட வரவேற்பு எடப்பாடிக்கு கொடுக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+