சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்: செல்வி இராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த இராம. பழனிசாமி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் குறிஞ்சிபாடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக ஜான்தங்கம் போட்டியிடுவார் என்றும் அதிமுக தலைமை கூறியுள்ளது.

அதிமுக கூட்டணி தொகுதியில் 177 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதிமுக வேட்பாளர் பட்டியலில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளராக இராம. பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் குறிஞ்சிபாடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

AIADMK candidate change in Kurinjipadi constituency

இதேபோல் பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக ஜான்தங்கம் போட்டியிடுவார் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

AIADMK candidate change in Kurinjipadi constituency

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம், (156) குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கடவார் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏழு பேர் விடுதலையை அரசு தொடர்ந்து வலியுறுத்தும் - அதிமுக தேர்தல் அறிக்கையில் தகவல்!ஏழு பேர் விடுதலையை அரசு தொடர்ந்து வலியுறுத்தும் - அதிமுக தேர்தல் அறிக்கையில் தகவல்!

AIADMK candidate change in Kurinjipadi constituency

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஜான்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
AIADMK candidate has been shifted from Kurinjipadi constituency. It has been announced that selvi Ramajayam will contest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X