இன்று பங்குனி உத்திரம்+ பவுர்ணமி.. ஒரே நாளில் 33 அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்!
சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலை அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று தாக்கல் செய்கிறார்கள்.
அதிமுக சார்பில் 33 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்பது கடந்த 20ஆம் தேதி தொடங்கியது.
அது போல் 27ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. அது போல் மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக 33 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த 33 வேட்பாளர்களும் இன்று பகல் 12 மணிக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களும் பின்வருமாறு:
வடசென்னை - ராயபுரம் மனோ
தென்சென்னை - ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
ஆரணி - கஜேந்திரன்
விழுப்புரம் - பாக்யராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் - சந்திரஹாசன்
நாகை - சுர்ஜித் சங்கர்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - பாபு
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
தருமபுரி - அசோகன்
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி - லோகேஷ்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
சிவகங்கை - சேவியர் தாஸ்
நெல்லை - ஜான்சி ராணி
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications