"பன்னீர்” ரோஜா மாலை - எடப்பாடி மனதில் உறுத்தல்! உடனே முன்னாள் அமைச்சரை அழைத்து.. நெகிழ்ந்த ரரக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையில் பன்னீர் ரோஜா மாலை போட்டதற்காக கோபப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அதை அணிவித்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு வெளியான பரபரப்புடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.

இந்த கூட்டத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பொதுக்குழு ஒத்திவைப்பு

பொதுக்குழு ஒத்திவைப்பு

அப்போது பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பன்னீர் ரோஜா மாலை

பன்னீர் ரோஜா மாலை

இந்த கூட்டத்தில் அவைத் தலைவரின் தீர்மானத்தை வரவேற்று பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி எழுந்தார். அப்போது அதிமுகவின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தனது ஆதரவாளர்களுடன் மேடையேறி எடப்பாடி பழனிசாமிக்கு பன்னீர் ரோஜா மாலையை அணிவித்தார். இதனால் மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.

எடப்பாடி பழனிசாமி கோபம்

எடப்பாடி பழனிசாமி கோபம்

பெஞ்சமின் மீது எடப்பாடி பழனிசாமி கோபமடைந்தவுடன் அங்கிருந்த அதிமுக தலைவர்கள், அவரை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். முதல் நாள் பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக வந்த தீர்ப்பு காரணமாக டென்சனில் இருந்த பழனிசாமி மேடையிலேயே அவேசப்பட்டதாக கூறப்பட்டது. அமைச்சர் பெஞ்சமினிடம் எடப்பாடி பழனிசாமி கோபப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Recommended Video

    ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் - முன்னாள் அமைச்சர் வளர்மதி அரூடம்
    வருத்தம் தெரிவித்த எடப்பாடி

    வருத்தம் தெரிவித்த எடப்பாடி

    இதனால் பெஞ்சமின் அனைவருக்கும் முன்னரே தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவுக்கு பிறகு இதனை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி பெஞ்சமினை அழைத்து வரச் செய்து தான் மேடையில் நடந்துகொண்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்தார். அத்துடன் தனது கோபத்திற்கான காரணத்தையும் அவர் தெரிவித்ததாகவும், இதனால் பெஞ்சமினும் அவரது ஆதரவாளர்களும் நெகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+