"சிறப்பு காட்சி.." குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி தராங்களே.. உள்ளே வந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக சார்பில் எக்ஸ் பக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவைச் சரமாரியாக விமர்சித்துப் பேசினார்.
அதிமுகவின் 52ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் அதிமுக சார்பில் டிவிட்டர் ஸ்பேசில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டணி குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறிய அவர், திமுகவை விமர்சிக்கும் தவறவில்லை.
அதிமுக: கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக பாஜக கட்சிகள் கடந்த சில காலமாகவே கூட்டணியில் இணைந்து பயணித்து வந்தது. கடந்த லோக்சபா தேர்தல். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சட்டசபைத் தேர்தல் எனத் தொடர்ந்து பயணித்தே வந்தனர். இடையே சில மோதல்கள் வந்தாலும் இரு கட்சிகளும் இணைந்தே பயணித்து வந்தன. இந்தச் சூழலில் அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையானது.
இதற்கு அதிமுக தலைவர்கள் கடும் பதிலடி கொடுத்தனர். சிவி சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ எனப் பலரும் பதிலடி கொடுத்தனர். இது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், பா[த கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் தனித்து கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போம் என்றே அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கிடையே கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக தொடக்க விழாவை முன்னிட்டு டிவிட்டர் ஸ்பேசில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தென் மாவட்டங்களில் நாம் அதிமுகவைப் பலப்படுத்தியே தீர வேண்டும். இந்தப் பணிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டும். அவர்களால் தான் அதிமுகவைப் பலப்படுத்த முடியும்.
சிறப்பு காட்சி: தமிழ்நாட்டில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதை நாம் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தருகிறார்கள்.. மற்ற நிறுவனங்களின் படங்களுக்குச் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கிறார்கள்.
கூட்டணி: தமிழ்நாட்டிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. அப்படியிருக்கும் போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் "இந்தியா" என்ற கூட்டணியை அமைத்து நாட்டை காப்பாற்றப் போகிறேன் எனக் கிளம்பிவிட்டார். லோக்சபா தேர்தலில் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.. திமுக அரசை வீட்டு அனுப்ப வேண்டும். அதற்கான வேலையை மட்டும் அதிமுக தொண்டர்களாகிய நீங்கள் பாருங்கள்..
அதிமுக கூட்டணியைப் பார்த்து உங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலின் கேட்கிறார்.. நான் அவரிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா" என்று அவர் பேசினார். மேலும், வரும் அக். 30ஆம் தேதி தேவர் குருபூஜைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications