நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. திமுக செய்யும் வேலையை பாருங்க.. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வார்டு வரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர். எம். பாபு முருகவேல் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவிதார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இனி பாக்கி இருப்பது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் மட்டுமே. எனவே உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

அதிமுக ஆட்சேபணை
மேலும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் அஇஅதிமுக சார்பில் கழக மாவட்டச் செயலாளர்களும், தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவித்தனர்.

அதிமுக புகார்
இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வார்டு வரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர். எம். பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தபிறகு அவர் அளித்த பேட்டியில்,

வார்டு வரையறை வாய்மொழி உத்தரவு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையிலான அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கூறப்பட்ட ஆட்சேபனைகளின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை. வாய்மொழி உத்தரவாகத்தான் வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக எங்களுக்குத் தெரிகிறது.
அதாவது திமுகவின் வாங்கு வங்கி குறைவாக இருக்கும் வார்டுகளில் சில வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கவும், அந்தந்த பகுதியிலுள்ள திமுக நிர்வாகிகளுக்கு சாதகமாகவும் வார்டு மறுவரையறை, வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் நடைபெற்று வருவதாக பாபு முருகவேல் குற்றம் சாட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது அரசு சார்பில் முறையான அறிவிப்பு செய்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பது, வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்றது.
ஆனால் தற்போது நடைபெறும் திமுக அரசில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற நடவடிக்கைகள் உரிய வாக்காளர்களின் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். அதாவது கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வாக்காளர்களின் அனுமதியின்றி அவர்களுக்கு தெரியாமல் ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டிற்கு குறைந்தபட்சம் 30 லிருந்து 80 வாக்காளர்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள்.

மாற்றாந்தாய் மனப்பான்மை
இதுமட்டுமின்றி நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல புகார்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தோம் அதன்மீது எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்றும் ஆளுங்கட்சியை தவிர்த்து மற்றவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்பதையுமே காட்டுகிறது. எனவே இந்த புகாரின் மீது உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறை யையும், வாக்காளர்களின் முன் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வாக்காளர்பட்டியல் திருத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என புகாரில் தெரிவித்துள்ளதாக ஆர். எம். பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications