காங்கிரஸ் குஷி! எடப்பாடி முக்கோண வியூகம்! வேலைக்கே ஆகாது! அதிரி புதிரி முடிவெடுத்த அறிவாலயம்
சென்னை: தமிழ்நாடு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களுக்கும் மேல் உள்ள நிலையில் இப்போதே கூட்டணி குறித்த விவாதங்கள் நடக்க தொடங்கி விட்டன. இந்த முறை கூட்டணி பார்முலாக்கள் மாறுமா.. இல்லை அதே கூட்டணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த விவாதங்களுக்கு இடையில் சத்யமூர்த்தி பவனில் இருக்கும் கதர் சட்டைகள் மட்டும் ஏக குஷியில் இருக்கிறார்களாம்!
ஒரு பக்கம் அறிவாலயம்.. இன்னொரு பக்கம் சத்யமூர்த்தி பவன்.. இங்கே கமலாலயம்.. அங்கே ராயப்பேட்டை அதிமுக அலுவலகம்.. இப்படி 4 அலுவலகங்களும் அந்த செய்தியை கேட்டு ஆடிப்போய் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்பாக ஊடகங்களில் வெளியான ஒரு யுகம்தான் இந்த பரபரப்பிற்கு காரணம்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு அடிபோட்டு வருகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டதுதான் இந்த பரபரப்பிற்கு காரணம்.

என்ன நடந்தது?
அதிமுகவிடம் அரசியல் ஆலோசகராக இருந்தவர் சுனில். இவர்தான் தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த முயற்சிகளை செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருக்கிறார். இந்த சுனில் மூலம்தான் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைய போவதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும். சிறுபான்மையினர் வாக்கு வங்கி சரியும்.

வாக்கு வங்கி
அதனால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி சுனில் மூலமாக முயன்று வருவதாகவே செய்திகள் வருகின்றன. பாஜகவுடன் இப்போது அதிகாரபூர்வமாக அதிமுக கூட்டணியில் இல்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உருவாக்காமல் உறவை முறிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு காரணம் தேவை. அந்த காரணம்தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்தது.

எடப்பாடி
மதுரைக்கு வந்த மோடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்தார். இதில் எடப்பாடி பழனிசாமி தனியாக வர நினைத்ததாகவும், மோடிதான் ஓ பன்னீர்செல்வத்தையும் வர அனுமதித்தார். அதோடு இரண்டு பேரையும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் அருகருகே நிற்க வைத்தனர் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதில் அப்செட் ஆன எடப்பாடிதான் தனக்கு சரியான மரியாதை இல்லை என்று அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு தாவ போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன.

திமுக பிளான்
காங்கிரஸ் - அதிமுக - பாமக போன்ற கட்சிகள் என்று முக்கோண வியூகம் அமைத்து கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி இந்த திட்டம் போட்டுள்ள நிலையில் திமுக இதற்கு பதிலடி கொடுக்கவும் தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது. அதாவது திமுக தனது கூட்டணி கட்சிகளை அனுசரித்து சென்று கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதை காட்ட அறிவாலயம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி
அதன்படி சமாதானம் செய்யும் திட்டத்தில் திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சிக்கு வந்த பின் முதல்வர் ஸ்டாலின் பெரிதாக கூட்டணி தலைவர்களை ஒன்றாக சந்திக்கவில்லை. ஒரே மேடையில் இவர்கள் எல்லோரையும் அழைத்து வைத்து பேச முடியவில்லை. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நினைக்கும் கூட்டணி தலைவர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி ஏற்பட்டுவிட கூடாது என்பதால் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமாதானம்
இன்னொரு பக்கம் டெல்லியில் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. 2024 லோக்சவா தேர்தலில் திமுக மம்தா, நிதிஷ் குமார் போன்றவர்களை ஆதரித்தால் வேண்டுமானால் அதிமுக கூட்டணி பற்றி பேசலாம். இப்போது கூட்டணி மாறுவதை பற்றி பேச வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் ராகுல் டீம் இருக்கிறதாம். ஆனால் இந்த அரசியல் டெவலப்மென்டுகள் காரணமாக காங்கிரஸ் தரப்புதான் ஏக குஷியில் இருக்கிறதாம்.

குஷி
அதன்படி அதிமுக கூட்டணி அழைத்தால் நமக்குத்தான் நல்லது. கூடுதல் இடங்களை திமுகவிடம் கேட்க முடியும். அதிமுகவிடம் சென்றுவிடுவோம் என்று கூறி கூடுதல் இடங்களில் போட்டியிட முடியும். கூட்டணி பேச்சுவார்த்தையில் வாய்ஸை உயர்த்த முடியும் என்று காங்கிரஸ் நினைக்கிறதாம். அதிமுகவில் சரியான தலைமை இல்லாத நிலையில் இப்போதைக்கு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் காங்கிரசில் பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லை என்றே கூறப்படுகிறது,












Click it and Unblock the Notifications