ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்.. டீசல் விலை குறைப்பு , மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்னாச்சு.. ஓபிஎஸ் கேள்வி
சென்னை : திமுக அரசு தாக்கல் செய்துள்ளது ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை எனவும் திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாண்புமிகு நிதி மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை எதோ ஒரு வணிக நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுவது போல் 'உள்ளதே" தவிர..
தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாக, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாக, ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிக்கையாக இல்லை.

ஓபிஎஸ் அறிக்கை
இந்த நிதிநிலை அறிக்கை தி.மு.க அரசு மக்களுக்கு எவ்வளவு துரோகம் செய்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காண்பித்திருக்கிறது. தி.மு.க.வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்விக் கட்டணம் ரத்து, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதல் சர்க்கரை வழங்குவது, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரகத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 இலட்சம் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை குறித்து நிதிநிலை அறிக்கையில் எதும் தெரிவிக்கப்படாதது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

மகளிர் உரிமைத் தொகை
தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதைப் பெறத் தகுதியுடையவர்கள் யார், யார் என்பதை 'கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், இதன் அடிப்படையில் இந்த அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்பது இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்பது தெளிவாகிறது.

மாநில நிதிநிலை
மாநில நிதிநிலை மேம்பட்டாலும், நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை செயல்படுத்தியதுபோல் ஒரு சிலருக்கு மட்டும் அளித்துவிட்டு, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடிக்கப்படும் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. இதன்மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது. 202-2023 ஆம் ஆண்டிற்கான முழு வரவு செலவுத் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே 2021-2022 ஆம் ஆண்டு திருந்த வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று சென்ற ஆண்டு மாண்புமிகு மேலாண்மை மற்றும் நிதித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். அப்படி என்றால், இந்த நிதிநிலை அறிக்கையிலே புதிதாக வருவாயைப் பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்க வேண்டும். செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
ஆனால், அப்படியொன்றும் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்ற ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில் "கனிமங்கள் மற்றும் சுரங்கங்களில் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்களிடமிருந்து பெறப்படும் ஒட்டுமொத்த வருவாய் பெருமளவு அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து, வருவாயைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

திருத்திய நிதிநிலை அறிக்கை
சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கடந்த நிலையில், குழு அமைக்கப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவே இல்லை. ஒருவேளை, மாநில கல்விக் கொள்கையை மறந்துவிட்டதோ அரசு என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ்நாடு மின் உற்பத்தி
சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் வீட்டிற்கான இலவச மின்சாரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இரப்புகளுக்கு நிதி வழங்கவும் 19.672.77 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 19.297.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 575,25 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று, மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறைக்காக சென்ற - ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 18,933 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 17,901,73 கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, 1,031/47 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது.

சமூகப் பாதுகாப்பு திட்டம்
சமூகப் பாதுகாப்பினை வளப்படுத்துதல் இந்த வரவு-செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகைக்கு 4.816 கோடி ரூபாவினை ஒதுக்கிலிருக்கும் தமிழ்நாடு அரசு, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான முதியோர் உதவித் தொகை 1,500 ஆக உயர்த்தப்படும் என்பது குறித்து வாய் திறக்காதது சமூகப் பாதுகாப்புத் "திட்டங்களின்கீழ் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளிடையே பெருந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏமாற்றமளிக்கும் அறிக்கை
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும், ' எதிர்பார்ப்பு குறித்த எந்த தீர்க்கமான 'பார்வையும் இல்லாமல் இருக்கிறது. மக்கள் நலனுக்கு என்று இந்த நிதிநிலை அறிக்கையில் ஏதுமில்லை; ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு இந்த வரவு-செலவுத் திட்டம் எந்த வகையிலும் பயன்படாது. மொத்தத்தில், இந்த நிதிநிலை அறிக்கை ஓர் ஏமாற்றமளிக்கும் அறிக்கை." என கூறியுள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications