Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை - அறிக்கையில் கொந்தளித்த ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நீட் தேர்வுக்கு மூல காரணமாக இருந்ததை மூடிமறைக்க அதிமுக மீது திமுக வீண்பழி சுமத்துவதாகவும், யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஒருக்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்ரு வெளியிட்டுள்ள அறிக்கையி,,"நீட் தேர்வு குறித்து அதிமுக மீதும் என் மீதும் குற்றம் சாட்டி அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அறிக்கைவிட்டு இருப்பதைப் பார்த்தால் எவ்வளவு பெரிய பொய் சொன்னாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள் என்ற கோயபல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது, திமுகவின் இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை அதிமுகவுக்கு உண்டு.

இந்திய மருத்துவ குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை 27.12.20 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே இளநிலை மருத்துவ படிப்பிற்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவ கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

இதேபோன்று இந்திய மருத்துவக் குழுவால் 21.12.10 தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் முதல் பத்தியில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ஒழுக்க நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2010ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன்.

பொய் பிரச்சாரம்

பொய் பிரச்சாரம்

திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார் திரு துரைமுருகன் அவர்கள், 2010ஆம் ஆண்டில் டிசம்பர் நீட்டுக்கு கையெழுத்து போட்ட திமுக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஐந்தே மாதத்தில் ஆட்சியை இழந்து விட்டது. பிறகு எப்படி திமுகவின் ஆட்சி காலத்தில் நீட் வரும். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது என்ற துரைமுருகன் அவர்களின் வாதமே வடிகட்டின பொய் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒருவேளை 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோற்று விடுவோம் என்று தெரிந்து கொண்டுதான் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இது போன்ற ஏழை எளிய மக்கள் விரோத நுழைவுத்தேர்வுக்கு திமுக ஆதரவு அளித்தது என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

கருணாநிதி அறிக்கை

கருணாநிதி அறிக்கை

அப்போதைய திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்றும் மருத்துவ படிப்பிற்கு மத்திய அரசு நீட்தேர்வு நடத்தப்படுவதாக தகவல் வருகின்றன என்றும் இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மத்திய அரசில் இருந்து கொண்டு தகவல் வருவதாக அறிக்கையை வெளியிடுவதில் இருந்து திமுக எந்த அளவிற்கு நீட் தேர்வு ரத்து என்ற பிரச்சனையில் அக்கறை இல்லாமல் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அதாவது 2010ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்திட்டு விட்டு 2012ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் முரசொலியில் எழுதுகிறார், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற அடிப்படையில் திமுக செயல்பட்டு இருப்பது தெளிவாகிறது.

மனசாட்சியுடன் அதிமுக

மனசாட்சியுடன் அதிமுக

அதிமுகவைப் பொறுத்தவரையில் உளப்பூர்வமாக மனசாட்சியுடன் ஏழை எளிய கிராம மாணவர்களுக்கு, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பாடுபட்டது. நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்காத நிலையிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மாநில அரசால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது. இதன் காரணமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 400 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். திமுக செய்த தவறினால் ஏற்பட்ட காயத்திற்கு ஓரளவு மருந்து கொடுத்து குணப்படுத்தியது அரசு அதிமுக அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு ரத்துக்கு தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அதிமுக ஆட்சி நடத்தியதாக துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார் யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை அதே சமயத்தில் தமிழ் நாட்டின் நலனுக்காக தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்க தயங்க மாட்டோம் காரியம் பெரிதோ வீரியம் பெரிதா என்று கேட்டால் எங்களை பொறுத்தவரை காரியம் தான் பெரிது அதனால் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்தன என்பதை துரைமுருகன் புரிந்து கொள்ள வேண்டும் இலங்கை தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டபோது திமுக என்ன செய்துகொண்டிருந்தது அதற்கு பெயர் என்ன என்பதை துரைமுருகன் அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் செய்த தவறை ஒப்புக் கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து அதிமுகவை குறை சொல்வது கடும் கண்டனத்திற்குரியது கருமமே கண்ணாயினார் என்பதன் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்", என அந்த அறிக்கையில் ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+