சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது... முதல்வர் பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது என போரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Recommended Video

    திருவள்ளூர்: பொய்யர் ஸ்டாலினே… பிடிங்க நோபல் பரிசு… பிரச்சாரத்தில் ‘மாஸ்’ காட்டிய எடப்பாடியார்!

    திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் பூந்தமல்லி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளுக்குக்கான தேர்தல் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போரூர் நான்கு சாலை சந்திப்பில் இன்று காலை திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அவருக்கு மத்திய மாவட்ட செயலாளர் பெஞ்சமின் வரவேற்பு அளித்தார். மேலும் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்து முதல்வரை வரவேற்றனர்.

    இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் , எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் போகும் இடத்தில் எல்லாம் அவர் சொல்வதை பழனிச்சாமி செய்வதாக கூறுகிறார்.ஆனால் நான் செய்வதை தான் அவர் சொல்கிறார்.

    கடனை ரத்து செய்தது ஏன்

    கடனை ரத்து செய்தது ஏன்

    போரூர் மேம்பாலம் திமுக ஆட்சியில் அவசர கோலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது அதிமுக ஆட்டசியில் சட்ட போராட்டம் நடத்தி பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
    பூந்தமல்லி, மதுரவாயல் தொகுதிகளுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயி கஷ்டம் தெரிந்து விவசாய கடனை ரத்து செய்துள்ளேன். ஸ்டாலின் சொன்னதால் ரத்து செய்யவில்லை.

    புதுமையான பிரச்சாரம்

    புதுமையான பிரச்சாரம்

    எல்லாரும் வாக்குறுதி அளித்து விட்டு மக்களை சந்திப்பார்கள் ஆனால் நாங்கள் வாக்குறுதியை செயல்படுத்தி விட்டு மக்களை சந்திக்கிறோம் ஆனால் ஸ்டாலின் ஊர், ஊராக சென்று பெட்டி வைக்கிறார். சென்னையில் மழைக்காலங்களில் 3 ஆயிரம் இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் சிரமம் அடைந்தனர்.

    பொங்கல் பரிசு 2500

    பொங்கல் பரிசு 2500

    சட்டம், ஓழுங்கு சிறப்பாக உள்ளது. கட்டபஞ்சாயத்து இல்லை, வியாபாரிகளிடம் வசூல் செய்வது இல்லை மக்களுக்கு சேவை செய்ய அதிமுக ஆட்சி உள்ளது.
    பொங்கல் பரிசு 2500 , கொரோனா காலத்தில் விலையில்லா அரிசி, சக்கரை, பணம் கொடுக்கப்பட்டது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பாக ஆட்சி நடக்கிறது. கல்வி தரத்தை உயர்த்த நடுநிலை பள்ளி உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு போராடி கொண்டு இருக்கிறது‌.

    யாரும் முதல்வராகலாம்

    யாரும் முதல்வராகலாம்

    ஏழை எளிய மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதில் 435 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதிமுக ஜனநாயக இயக்கம் இந்த கட்சியில் இருப்பவர்கள் சாதாரண தொண்டர் கூட முதல்வராக முடியும், எம்.எல்.ஏ., எம்.பி ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது.

    மயானம் கோரிக்கை

    மயானம் கோரிக்கை

    நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமான பணிகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஓராண்டுக்கு தேவையான குடிநீர் சேமித்து வைத்துள்ளோம். மதுரவாயல் பகுதியில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் மயானம் கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர். மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறினார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy said during the election campaign in Porur that the AIADMK could not be touched even if a thousand Stalin came, not one Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X