தொகுதிக்கு 100 கோடி... வேலூர் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யணும்- ஜெயக்குமார்!
சென்னை: வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் உறுதி செய்யப்பட்டால் அந்த தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
வேலூரில் சிமெண்ட் குடோனில் நடத்தப்பட்ட வருமான சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இந்த பணம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தனர். இன்று தமிழக அரசியல் கட்சியனரை தனித்தனியாக சந்தித்து கிண்டியில் ஆலோசனை நடத்தினார்கள்.
அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக விஞ்ஞான பூர்வமான முறையில் பூத் அளவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருகிறது. இத்தகைய செயல்களின் மூலம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது.
அதிமுக மக்கள் மீதான நம்பிக்கையில் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணி, குறிப்பாக திமுக, மக்களை நம்பாமல், கொள்ளைபுற வழியாக வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக, 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் அடித்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடியை வெள்ளம் போல் அள்ளி தெளித்து, எப்படியாவது குறுக்குவழியிலே வெற்றி பெற்றுவிடலாம் என்கிற வகையிலே கங்கணம் கட்டிக்கொண்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் 100 கோடி அளவுக்கு, ஆங்காங்கே திமுக பிரமுகர்களின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது, வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் உறுதி செய்யப்பட்டால் அந்த தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளோம்." இவ்வாறு ஜெயக்குமார் கூறினார
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications