அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா
சென்னை: வரும் தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுகவுக்கு 17 சதவீதம் ஓட்டு கூட இல்லை. அவர்கள் 146 தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு போய்விட்டார்கள். திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் உண்மையான போட்டி. இதில் சென்னையில் எடுத்துக்கொண்டால் தவெக 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். அவர் பேசியதன் விவரம் வருமாறு:-

அதிமுக களத்திலேயே இல்லை
திமுக 26 கட்சி என்று சொல்வது எல்லாம் சும்மா.. அதில் பாதி லெட்டர் பேடு கட்சி. 26 கட்சி கூட்டணி என்பது ஜீரோ கூட்டணி. ஒரு தலைவரைத்தான் மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதா, ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி சரியில்லை. அதனால், ஸ்டாலின் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறார்.
திமுகவின் ஒரே பயம், ஜெயலலிதா எப்படி ஸ்ட்ராங்கா நின்றார்களோ அதற்கு பிறகு வலிமையாக இருக்கும் தலைவராக விஜய் உள்ளார். யார் அழுத்தத்தை மீறி, வருத்தங்களை மீறி சொத்தை தூக்கி போட்டுவிட்டு, ஆசாபாசங்களை மீறி, உச்சபட்ச சினிமா புகழை தூக்கி போட்டுவிட்டு யார் தியாகம் செய்கிறார்களோ அவர்களை தமிழ்நாடும் மக்களும் தேர்வு செய்வார்கள்.
சென்னையில் 11 தொகுதிகளில் தவெக
அதற்கு 20 பேர் தேவையில்லை. வலிமையான, நேர்மையான, துணிவான தலைவரைத்தான் தமிழ்நாடு தேர்வு செய்யும். இந்த பட்டியலில் எடப்பாடி அவுட். இப்போ இருக்கிற சூழலில் அதிமுகவோட வாக்கு வங்கி 17 சதவீதம் கூட கிடையாது. அவர்கள் களத்திலே இல்லை. 146 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு போயிவிட்டார்கள். திமுக - தவெக இடையேதான் இன்று போட்டி சென்று கொண்டு இருக்கிறது.
இதுதான் உண்மை. அதற்கு சென்னை ஒரு உதாரணம். சென்னையில் தொகுதி பொறுப்பாளர்க்ளை அறிவித்த பிறகு 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் தவெக முன்னிலையில் நிற்கிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவித்ததும் அங்கேயும் வந்துவிடுவோம்.
திமுகவை விட தவெகக்கு 2 சதவீதம் அதிகம்
சென்னையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. தலித் சகோதரர்களுக்கு எதுவுமே கிடைப்பது இல்லை. எழும்பூர் தொகுதி பின் தங்கி உள்ளது. மக்கள் ஏழ்மையாக இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்கை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏழையாக இருந்தாலும் உண்மையாக இருந்தால் அவரை வேட்பாளராக விஜய் அறிவிப்பார்.
25 வருட எதிர்காலத்தை உருவாக்க நல்ல தலைவர் அவசியம். விஜய் அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு வந்து இருக்கிறார். திமுக பாரம்பரியத்தை எல்லாம் தூக்கி போடும் தேர்தல் இது. இன்றைக்கு திமுகவைவிட நாம் 2 சதவீதம் அதிகமாக இருக்கிறோம். அதனால்தான் திமுக நம்மை பார்த்து பயப்படுகிறது.
ஜெயலலிதாவை திட்டினார்கள்
ஒருவர் பயந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? பயங்கரமாக திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். எடப்பாடியை யாராவது திட்டுகிறார்களா.. எல்லா யூடியூப், விவாதம் எடுத்துக்கொள்ளுங்கள்.. எல்லாரும் விஜய்யை திட்டுகிறார்கள். அதற்கு பிறகு என்னை திட்டுவார்கள். மக்கள் இதையெல்லாம் நம்ப மாட்டாங்க..
ஜெயலலிதாவை 2011ல் அவ்வளவு திட்டினார்கள். கடைசியில் அதிமுக ஜெயித்தது. திமுக எதிர்க்கட்சியாக கூட வரவில்லை. ஏன்பா என்புள்ள விஜய்யை இப்படி திட்டுறாங்க.. என்று மக்கள் நினைக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications