"அப்படி ஒரு நிலைமையை அதிமுகவுக்கு தரமாட்டார்கள்".. தவெக பேரை சொன்னதுமே ராஜேந்திர பாலாஜி ரியாக்ஷன்
சென்னை: தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டால் தவெக உடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அப்படி ஒரு நிலைமையை அதிமுகவுக்கு தமிழ்நாடு மக்கள் தர மாட்டார்கள். அதிமுகவுக்கு பெரும்பான்மை வாக்குகள் அளிப்பார்கள். எடப்பாடியார் பெரும்பான்மை பலத்தோடு முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் நாளை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிவகாசி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆளுங்கட்சியினரால் திணிக்கப்பட்டவை என்று குற்றம்சாட்டினார்.
இந்த கணிப்புகளைப் பொய்யாக்கி, அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தவெக இளைஞர்கள் மத்தியில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு போதாது என்றும், அதிமுகவே முதலிடத்தை பிடிக்கும். திமுக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
திமுகவுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டவை எல்லாம் அவர்களின் பினாமி சேனல்கள். கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது, கிட்டத்தட்ட அனைத்து கணிப்புகளும் திமுக வெற்றி பெறும் என்றே கூறின. ஆனால் ஜெயலலிதா தலைமையில் அதிமுக 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை ராஜேந்திர பாலாஜி சுட்டிக்காட்டினார்.
வடநாட்டிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எடுக்கப்படும் இத்தகைய கணிப்புகள் வாக்காளர்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்காது என்றும், கருத்துக்கணிப்புகளை ஊடகங்களின் தீனி என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்காது என்றும் அதிமுகவின் வெற்றி உறுதியானது என்றும் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டால் தவெக உடன் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, "அப்படி ஒரு நிலைமையை அதிமுகவுக்கு தமிழ்நாடு மக்கள் தர மாட்டார்கள். அதிமுகவுக்கு பெரும்பான்மை வாக்குகள் அளிப்பார்கள். எடப்பாடியார் பெரும்பான்மை பலத்தோடு முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications