பாஜக உடனான கூட்டணி களேபரத்துக்கு மத்தியில் இன்று மா.செக்கள் கூட்டம்.. வேகம் காட்டும் எடப்பாடி!
சென்னை: பாஜக உடன் கூட்டணி அமைத்த பின்னர் முதல் முறையாக இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் நடைபெறுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், அதிமுகவில் 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்று (25.04.2025 - வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு, அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். பாஜக - அதிமுக இடையே கூட்டணி உறுதியான பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணி அறிவிப்புக்கு பிறகு
பாஜக உடன் கூட்டணி என அறிவித்த பின்னர் அதிமுகவில் சில சலசலப்புகள் எழுந்தன. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இன்று நடைபெறும் மா.செக்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அதிமுகசெயற்குழு கூட்டம் வரும் மே மாதம் 2ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருந்து
முன்னதாக, கட்சி எம்எல்ஏக்களை உற்சாகப்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்களுக்கு தடபுடல் விருந்து அளித்தார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
-
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications