லோக்சபா தேர்தல் கூட்டணி இறுதியாகிறது? பிப்.8ல் மா.செ.க்கள் கூட்டம்... அதிமுக அறிவிப்பு
சென்னை:வரும் 8ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
தேசிய கட்சிகளை தொடர்ந்து, தமிழகத்தில் மாநில கட்சிகளும் லோக்சபா தேர்தல் வேலைகளை சுறுசுறுப்பாக்கி வருகின்றன. திமுக, காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலை களம் காண்கிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் திமுக கூட்டணியில் இணையும் என்று தெரிகிறது.

யாருடன் கூட்டணி என்பது பரம ரகசியம், பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது, 15 நாட்களில் கூட்டணி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் என்று அதிமுகவில் அமைச்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தற்போது வரும் 8ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முக்கிய எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications