பக்கத்து வீட்டு சண்டைக்கு காத்திருந்த எடப்பாடி.. சொந்த வீட்டிற்கு வந்த சூனியத்தை கவனிக்கலையே! போச்சு
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கடுமையான மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பாஜக அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்பதால் இந்த கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாகவே திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். திமுக கூட்டணியில் பிரிவினை ஏற்பட்டுவிட்டு விட்டது.. இந்த கூட்டணி உடைய போகிறது என்று மேடைக்கு மேடை எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார்.

பக்கத்து வீட்டு சண்டை
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டம் ஒன்றில் பேசுகையில், திமுக - காங்கிரஸ் இடையே சண்டை மூண்டுவிட்டது... நெல்லையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது... அதில் காங்கிரஸ் தமிழ்நாட்டின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொல்கிறார், "வரும் சட்டசபை தேர்தலில் பாதிக்குப் பாதி அதாவது 117 சீட் வேண்டும்" என்று தெளிவாக பேசுகிறார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் பேசுகிறார்... இந்த கூட்டணி உடைய போகிறது பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.
ஆனால் பக்கத்து வீட்டு சண்டைக்கு காத்திருந்தவர்.. சொந்த வீட்டு சண்டையை கவனிக்க தவறிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணிக்குள் நடக்கும் பேர சண்டையை கவனிக்க மறந்துவிட்டார்.
சொந்த வீட்டில் நடக்கும் சண்டை
அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கடுமையான மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பாஜக அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்பதால் இந்த கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
பாஜக கோரும் தொகுதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) வியப்பில் ஆழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சி வட்டாரங்களின்படி, பாஜக சுமார் 54 சட்டமன்றத் தொகுதிகளைக் கோரியுள்ளது. இது அதிமுக தலைமைக்குள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் குறைவான தேர்தல் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கை அதிமுக எதிர்பார்த்ததை விட மிக அதிகம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான தலைவர்கள் தெரிவித்தனர்.
கோவை மண்டலத்தில், பாஜக நகர்ப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புறத் தொகுதிகளான கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் ஆகியவற்றை கேட்டுள்ளது. இவற்றுடன், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய தொகுதிகளையும் கேட்டு, மேற்கு மண்டலத்தில் தமது கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எடப்பாடியை அதிர வைத்த பாஜக
கோவையில் 10ல் 6 இடங்களை பாஜக கேட்டுள்ளதால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் கோரிக்கைகள் மேற்குத் தமிழ்நாட்டுடன் மட்டும் நிற்கவில்லை. தென் மாவட்டங்களிலும் கேட்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தில், பாஜக ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை மற்றும் ராதாபுரம் ஆகிய தொகுதிகளையும் கோரியுள்ளது.
அருகாமை மாவட்டங்களில், தென்காசி, தூத்துக்குடியின் ஒட்டப்பிடாரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, பரமக்குடி மற்றும் ஷக்கோட்டை ஆகிய தொகுதிகளை பாஜக கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மதுரை தெற்கு, போடிநாயக்கனூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகளையும் பாஜக கோரியுள்ளதாக ஒரு தகவல் உண்டு.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பூர், ஆனைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம் மற்றும் வேலூர் ஆகிய அனைத்து ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் பாஜக கோரி வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சென்னையில் மட்டும் பாஜக மொத்தமாக 8 தொகுதிகளை கட்சி அடையாளம் கண்டுள்ளது.
எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகியவையே அந்தத் தொகுதிகள். இதை அதிமுகவிடம் வாங்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறதாம்.
அரசியல் நோக்கர்கள் இந்த வலுவான கோரிக்கைகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கும் என்று கருதுகின்றனர். 2026 தேர்தலுக்கு முன்னதாக, கூட்டணியின் ஒற்றுமையையும் தனது சொந்தத் தேர்தல் நலன்களையும் சமநிலைப்படுத்த வேண்டிய சவாலை அதிமுக எதிர்கொண்டுள்ளது.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications