Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு கேபிள் டிவி சேவை பாதிப்பு..’குடும்ப’ நிறுவனங்களுக்காக திட்டமிட்ட சதி..எடப்பாடி பழனிசாமி காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், சேவை மையங்களின் குறைபாடுகள் காரணமாகவும், செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாகவும், அதிமுக ஆட்சியில் 30 லட்சமாக இருந்த அரசு கேபிள் டிவி இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் அரசு கேபிள் செயல்பட்டு வருகிறது. கடந்த கலைஞர் ஆட்சிக் காலத்தில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டது. அவற்றிற்கு குறைந்த விலையில் கேபிள் டிவிகளை மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் அரசு கேபிள் திட்டமும் கொண்டுவரப்பட்டது.

Edappadi Palaniswami AIADMK Tamil Nadu Government Cable TV

அதற்கு முன்னதாக பல்வேறு தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் பொதுமக்களிடமும் ஆபரேட்டர்களிடமும் அதிக அளவு கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதனால் அரசே குறைந்த விலையில் மக்களுக்கு கேபிள் டிவி சேவை வழங்கு வகையில் அரசு கேபிள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து அரசு கேபிள் அனலாக்கில் இருந்து டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு மக்களுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இ சேவை , மையம் அதிவேக இணைய சேவை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அரசு கேபிள் டிவி சேவை முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. அடிக்கடி சேவை குறைபாடு ஏற்பட்டது அடுத்து பொதுமக்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் மாவட்ட அளவில் சேவை வழங்கும் எம்எஸ்ஓக்களிலும் குறைபாடு ஏற்பட்டது. இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் பலர் தற்போது மீண்டும் டிடிஎச் நிறுவனங்களையும் தனியார் கேபிள் ஆபரேட்டர்களையும் நாடி வருகின்றனர். இதனால் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சியில் அரசு கேபிள் டிவி பரிபாதகரமான நிலையில் இருப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2007-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்களால் ஒருசில குடும்ப காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனமானது, முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் எவ்வித செயல்பாடும் இன்றி கிடப்பில் இருந்தது.

அதன் பின்பு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு அதற்கான வாரியத் தலைவர், நிர்வாக இயக்குநர், பொது மேலாளர், அலுவலர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்றது. நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 24 ஆயிரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலமாக, 40 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிறுவனமானது, அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து டிஜிட்டல் லைசென்ஸ் பெறப்பட்டது.

அதன் பின்பு, அம்மா அரசில் இந்நிறுவனம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு சுமார் 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் தமிழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 24 ஆயிரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போதைய விடியா திமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், சேவை மையங்களின் குறைபாடுகள் காரணமாகவும், செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாகவும், அம்மாவின் ஆட்சியில் 30 லட்சமாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.

இந்நிலையில், கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம் (Conditional Access System (CAS) நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய AMC தொகையை முறையாக செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனத்தினால் கடந்த 15.6.2024 அன்று காலை முதல் தமிழகமெங்கும் உள்ள அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், 10 லட்சத்திற்கும் அதிகமான அரசு கேபிள் டிவி நேரடி வாடிக்கையாளர்களும், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது. இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ் நாடு அரசு கேபிள் டிவிஐ முடக்க நினைக்கும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+