Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீக்கிரம் முடிச்சு விடுங்க! இன்று இரவே டெல்லிக்கு பறக்கும் எடப்பாடி! மோடி, அமித் ஷாவுடன் மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒற்றைத் தலைமை கோரிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்திற்குள் எழுந்த மோதல், அதிரடி பேட்டிகள், அறிக்கைகள், பேச்சுவார்த்தைகள், காவல்துறை, நீதிமன்ற வாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டமே கலவர காடாக காட்சியளித்த நிலையில், கவிழ்ந்த தலையோடு பொதுக் குழுவில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ்.

 அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

இதனையடுத்து தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம். பாஜகவில் தனக்கு ஆதரவாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் மூலம் பிரதமர் மோடியை சந்தித்து இது குறித்து விவாதிப்பார் என கூறப்பட்டாலும், ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்காக வைத்து இருக்கிறார் என கூறப்பட்டது. அது ஓரளவு கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து சில சாதகமான நிகழ்வுகள் நடைபெற்றனர்.

பல மாற்றங்கள்

பல மாற்றங்கள்

அதே நேரத்தில் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற நிலையில் டெல்லி சென்றார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்ற நிலையில், அது கைகூடாமல் போனதால் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். இதனால் பாஜக தலைமை ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில், அடுத்த அதிமுகவில் பல மாற்றங்கள் நிலவின.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இருந்தாலும் விட்டுக் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தனது ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொண்டதோடு, பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவோடு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பு காரணமாக சட்டப்படி அதிமுகவின் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அடுத்தபடியாக டெல்லி உச்சநீதிமன்ற வழக்கு, தேர்தல் ஆணைய விவகாரங்களில் தனது தரப்புக்கு சாதகமான முடிவை பெரும் முனைப்பில் இருக்கிறார்.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் செல்ல இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இரவு 9:00 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அதிமுக உறுப்பினர் தயாராக இருக்கின்றனர். இதை அடுத்து மூன்று நாட்கள் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து அதிமுகவில் தனது தரப்புக்கு ஆதரவு கூறும் முயற்சிகள் மேற்கொள்வார் என தெரிகிறது. மேலும் தேர்தல் ஆணையரை சந்தித்து அதிமுக குறித்து தான் அளித்த மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

கூடுதல் பரபரப்பு

கூடுதல் பரபரப்பு

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் காசிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜகவை பொருத்தவரை ஓபிஎஸ்க்கு தான் ஆதரவு என அவரது அணி நிர்வாகிகள் கூறுவரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு சேகரிக்கும் முயற்சியில் டெல்லி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதனால் வரும் காலங்களில் அதிமுக விவகாரம் மேலும் சூடு பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு வழங்கும் என்பது இன்னும் புரியாத புதிதாகவே இருப்பதாக கூறும் அதிமுகவினர் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+