ஆள் இல்லாத கடையில் டீ போடுகிறாரே.. ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்
சென்னை : ஒரு சில ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்வது, ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் வரும் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமரிசித்துள்ளார். சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் ஜீவாதார உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சொத்துவரி, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல்வேறு பொருள்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது. இன்று ஜிஎஸ்டி வரி அதிகமாகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த சூழ்நிலையில் கூட ஜிஎஸ்டி விஷயத்தில் எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.
கல்விக்கடன் ரத்து, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ருபாய், பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் மானியம், முதியோர் உதவித்தொகை என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், அவர்களின் கட்சித் தலைவருக்கு ஊர் தோறும் சிலை வைக்கிறார்கள். அதற்கு பணம் இருக்கிறது, மக்கள் நலப்பணிகளுக்கு பணம் இல்லையா? திமுக விளம்பர அரசியல், கருணாநிதிக்கு புகழ்பாடுதல் ஆகிய இரண்டு வேலைகளைத் தான் செய்து வருகிறது. அதிமுக கொண்டு வந்த திட்டத்துக்கு லேபிள் ஓட்டுகிற வேலையும், பெயிண்ட் மாற்றுகிற வேலையையும்தான் செய்கிறது.
Recommended Video
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? சமூக நீதிக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. ஓபிஎஸ், ஒரு சில பேரை வைத்துக்கொண்டு, நான்தான் கட்சி என்று சொல்வது ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல வேடிக்கையாக இருக்கிறது. மாநிலத்தின் நலன், சிறுபான்னையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதிமுக-வின் நோக்கம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications