Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையே! அதிமுக தொண்டன் சும்மா இருக்காமாட்டான்.. ஜெயக்குமார் திடீர் எச்சரிக்கை.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த கருத்துகளுக்கு அவர் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்ததாக 2-வது பெரிய கட்சி அதிமுக.

AIADMK Ex Minister Jayakumar warns Annamalai on remarks against Anna

ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகவை ஓரம்கட்டிவிட்டு பாஜக எப்போதும் செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்வதை பாஜக தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சிக்கப் போய் ஒட்டுமொத்த அதிமுக தலைவர்களும் வரிந்து கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணியே பெரும் கேள்விக்குறியானது. ஒருவழியாக டெல்லி தயவால் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.

தற்போது பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து அண்ணாமலை அடுத்த பஞ்சாயத்துக்கு சுழி போட்டிருக்கிறார். அண்ணாமலை சென்னையில் பேசுகையில், பேரறிஞர் அண்ணாவை ஒருமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விமர்சித்தார் என்றெல்லாம் அண்ணாமலை கூறியிருந்தார். கடந்த சில நாட்களாக அதிமுக இது பற்றி அமைதி காத்து வந்தது.

எடப்பாடி டெல்லி விசிட்: மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றுதான் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுக- பாஜக இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அண்ணா பிறந்த நாள்: இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

ஜெயக்குமார் கண்டனம்: அண்ணா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து அளித்த பதில்: நடக்காத ஒரு விஷயத்தை பற்றி அண்ணாமலை பேசுகிறார். பாஜகவை வளர்ப்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களையும் மறைந்த தலைவர்களைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா குறித்து இப்படி பேசித்தான் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்.

சும்மா இருக்கமாட்டான் தொண்டன்: பேரறிஞர் அண்ணா மிகவும் உன்னதமான ஒரு தலைவர். அவரைப் பற்றி நடக்காத விஷயமாக, பசும் பொன் முத்துராமலிங்க தேவருடன் மோதல் ஏற்பட்டது என்கிறார். இது அண்ணா திமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. நடக்காத விஷயங்களை எல்லாம் நேரில் பார்த்தது போல அண்ணாமலை பேசுகிறார். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்காக தீர்மானமே நிறைவேற்றினோம். அண்ணாவைப் பற்றி இழிவாக பேசுவதைப் பார்த்துக் கொண்டு அண்ணா திமுக தொண்டன் சும்மா இருக்கமாட்டான். ஆகையால் அண்ணாமலை தமது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+