ரூ.100 கோடி நில அபகரிப்பு.. அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கல்! முன் ஜாமீன் மனு தள்ளுபடி
கரூர்: ரூ.100 கோடி நிலத்தை அபகரித்த புகாரில் தற்போது தலைமறைவாகிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை இன்று தள்ளுபடி செய்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 12 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.
கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், வெள்ளியணை பிரகாஷ் மகள் ஷோபனா, செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஷோபனாவுடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் என 4 பேரும் சார்பதிவாளர் அலுவலகம் வந்தனர். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது; அசல் ஆவணமும் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

டுத்த சிஎஸ்ஆர் நகல் என்னிடம் கொடுக்கப்பட்டது. ஷோபனா தர்ப்பில் யுவராஜ், பிரவீன் இதனை கொடுத்தனர். வெள்ளியணை சார்பதிவக அலுவலக மதிப்பு அறிக்கையுடன் கடந்த மே 10-ந் தேதி இந்த சொத்து கிரையம் செய்யப்பட்டது. ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் இது.
ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக புகார் மனுவை மறுநாளே என்னிடம் கொடுத்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என சான்றிதழ் தரவில்லை என தெரியவந்தது. ஆகையால் போலி சான்றிதழ் கொடுத்துதான் பத்திரம் பதிவு செய்தது உறுதியானது. இதனால் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். தற்போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என கோரியிருந்தார்.
இதனால் கரூர் போலீசார் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தாமும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார்.
மேலும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 12 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications