ஸ்டாலின் போட்ட பிரஷர்.. மழையிலும் தணியாத சூடு.. "உடனே பார்க்கணும்".. அமித் ஷாவை வளைத்த அதிமுக மாஜி?
சென்னை: தமிழ்நாடு வரும் அமித் ஷாவை பார்க்க அதிமுகவை சேர்ந்த சில மாஜி அமைச்சர்கள் தீவிரமாக முயன்று வருவதாக அதிமுகவை ரத்தத்தின் ரத்தங்கள் நமக்கு அப்டேட் கொடுத்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது தீவிரம் அடைந்து உள்ளது.
சென்னையிலும் அதிகாலையில் இருந்து மிக தீவிர கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த கனமழைக்கு நடுவிலும் தமிழ்நாட்டில் அரசியல் வெப்பத்தின் சூடு தணியாமல் உள்ளது.
அதற்கு காரணம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு விசிட்தான்!

அமித் ஷா
தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக நாளை அமித் ஷா தமிழ்நாடு வருகிறார். இந்த நிலையில்தான் அவரை பார்க்க அதிமுக தலைகள் சிலர் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள்.. பாஜக தலைகள் அல்ல.. அதிமுகவை சேர்ந்த தலைகள் சிலர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதிமுகவில் இருக்கும் மூத்த மாஜி அமைச்சர்கள்தான் அமித் ஷா அப்பாயின்மென்டை வாங்குவதற்காக சென்னையில் சூழ்ந்துள்ள மழை மேகங்கள் போல பாஜக தலைவர்களை சூழ்ந்து நின்று கொண்டு இருக்கின்றனர்.

நேரம் கேட்டு உள்ளனர்
கடந்த முறை பாஜக தலைவர் ஜெபி நட்டா தமிழ்நாடு வந்த போது அவரை மாஜி அமைச்சர் ஒருவர் சந்தித்தார். இந்த சந்திப்பு மிகவும் சீக்ரெட்டாக நடந்தது. நட்டாவுடன் மாஜி அதிமுக அமைச்சர் தனக்கு எதிரான வழக்குகள் குறித்து பேசியதாக கூறப்பட்டது. அதாவது அந்த மாஜி அமைச்சருக்கு எதிராக தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் சில உள்ளன. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர ரெய்டு மற்றும் விசாரணைகளை செய்து வருகிறது.

உள்துறை
ஆனால் தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை மட்டுமல்ல மத்திய அரசின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐயும் அந்த மாஜி அமைச்சரை குறி வைத்து உள்ளது. இதனால்தான் பிரஷர் தாங்காமல் அந்த மாஜி அமைச்சர் நட்டாவை சந்தித்து உள்ளார். ஏதாவது பண்ணுங்கள், உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்டு இருக்கிறாராம். இதை அதிமுக தலைகள் யாருமே எதிர்பார்க்கவில்லையாம். இப்படி பாஜக தேசிய தலைவரோடு அவர் மீட்டிங் நடத்துவார் என்பதை இவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

மீட்டிங்
இந்த நிலையில்தான் அமித் ஷாவை சந்திக்க அதிமுக மாஜிக்கள் சிலர் திட்டம் போட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டில் வேலுமணி, உதயகுமார், தங்கமணி, எடப்பாடி பழனிசாமி, காமராஜ் உள்ளிட்ட பலர் திமுகவின் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடங்கி கோடநாடு வழக்கு வரை பல்வேறு வழக்கு விசாரணையில் இவர்கள் சிக்கி உள்ளனர். இவர்களுக்கு எதிரான பிடி நாளுக்கு நாள் முதல்வர் ஸ்டாலின் மூலம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

என்ன நடக்கும்?
அமித் ஷாவை சந்தித்தால் தங்களுக்கு எதிராக பிரஷர் குறையும் என்று இவர்கள் நினைக்கிறார்களாம். இதன் காரணமாகவே அமித் ஷாவை சந்திக்க மாஜிக்கள் நேரம் கேட்டு இருக்கிறார்களாம். ஆனால் அமித் ஷா தரப்பில் இருந்து இதுவரை நேர்மை கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சர் அமித் ஷா வருவது தனியார் நிகழ்ச்சி.. அதன்பின் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். ஆனால் சந்திக்க நேரம் இருக்காது என்று பதில் வந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications