நேற்று கோவை விஷ்ணு பிரபு... இன்று மாஜி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன்.. திமுகவுக்கு தாவும் அதிமுக தலைகள்
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வி, உட்கட்சி பூசல், யார் அடுத்த தலைமை என பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கும் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணையும் படலம் தொடருகிறது. கிருஷ்ணராயபுரம் தொகுதி மாஜி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் இன்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு அதிமுகவின் இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநில துணைத் தலைவரான கோவை விஷ்ணுபிரபு திமுகவில் இணைந்தார். அதிமுக வெல்ல வேண்டும் என்பதற்காக அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் யாகம் வளர்த்தவர்.

கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குப் போய் யாகம் நடத்தி பரபரப்பை கிளப்பிய அதே விஷ்ணுபிரபுதான் இப்போது திமுகவுக்கு தாவியிருக்கிறார். அத்துடன் இன்னமும் பல லட்சம் பேர் அதிமுகவை விட்டு வெளியேறுவார்கள் எனவும் கூறியிருக்கிறார் விஷ்ணு பிரபு.
இந்நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் திமுகவில் இணைந்தார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னில் அவர் திமுகவில் இணைந்தார். கீதா மணிவண்ணனின் இந்த திடீர் முடிவால் கரூர் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications