திமுகவில் ஐக்கியமானார் அதிமுக மாஜி எம்.பி. லட்சுமணன்!
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. விழுப்புரம் லட்சுமணன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்காக களப் பணிகளில் அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

அதேபோல் தேர்தல் என்றாலே வழக்கமாக அரங்கேறும் கட்சி தாவல்களும் நடந்து வருகின்றன. திமுகவில் இருந்து விபிதுரைசாமி, கு.க.செல்வம் எம்.எல்.ஏ. பாஜகவுக்கு தாவி உள்ளனர்.
சிட்டிங் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சி தாவியது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் திமுகவுக்கு தாவினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. லட்சுமணன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ் அணியில் இருந்தார் லட்சுமணன். பின்னர் விழுப்புரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். அவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. இதில் லட்சுமணன் கடும் அதிருப்தி அடைந்திருந்தார்.

இதனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய லட்சுமணன் முடிவு செய்திருந்தார். இதனையடுத்து இன்று பகல் 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தமது ஆதரவாளர்களுடன் சென்றார் லட்சுமணன். அங்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் லட்சுமணன்.
Recommended Video
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications