Anwar Raja: அதிமுகவிலிருந்து சீனியர் தலைவர் அன்வர் ராஜா நீக்கம்! திமுக போவதாக “பிளாஷ்“ வந்ததும் நடவடிக்கை
சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி அன்வர் ராஜா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். அவர் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளார் என்ற செய்தி வெளியானதுமே அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார் அன்வர் ராஜா. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்கு அன்வர் ராஜா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என கூறியிருந்தார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் அன்வர் ராஜா, விரைவில் அதிமுகவிலிருந்து விலகுவார் அல்லது கட்சி தலைமையால் நீக்கப்படுவார் என யூகமான செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
அண்ணா அறிவாலயத்தில் அன்வர்
இந்த நிலையில் அன்வர் ராஜா, திமுகவில் இணைவதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான அடுத்த நொடியே அன்வர் ராஜாவை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
யார் இந்த அன்வர்
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் இருந்து வரும் அன்வர் ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்துத் தெரிவித்திருந்த போது கூட அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்தது. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த போது கூட, டெல்லி தலைமை அண்ணாமலையை கட்டுப்படுத்தாமல் பேசவிட்டதாக சொல்லப்பட்டது.
சலசலப்பு
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொள்வதாக கூறிய போது கூட அண்ணாமலையை அந்த கட்சி நீக்கவில்லை. ஆனால் தற்போது அன்வர் ராஜா நீக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சட்டசபை தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் அன்வர் ராஜா. இவர் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அது போல் 16 ஆவது மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதி எம்பியாக 2014 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.
சிஏஏவுக்கும் எதிர்ப்பு
இவர் தமிழக வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றயிருந்தார். ராமநாதபுரத்தில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்தது. இருவரும் கூட்டணி அமைத்து 39 இடங்களில் போட்டியிட்ட நிலையில் அதிமுகவில் இருந்த ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். அப்போது நாடாளுமன்றத்தில் சிஏஏ மசோதா தாக்கல் செய்த போது அதிமுக ஆதரவு அளித்தது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற போதிலும் இதற்கு அதிமுக ஆதரவு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சிஏஏவுக்கு அதிமுக ஆதரவு அளித்ததை கூட அன்வர் ராஜா விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திமுகவில் இணைந்ததன் மூலம் தென் மாவட்டங்களில் சிறுபான்மையினரின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. எனினும் அன்வர் ராஜாவின் வருகை திமுகவுக்கு சாதகமா அமைந்ததாக என்பது தேர்தல் முடிவுகளின் போதுதான் தெரியவரும்.
-
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications